தீகதந்து 1 யானையின் பிரேத பரிசோதனையின் போது 10 ரூபாய் நாணயம் ஒன்று அதன் வயிற்றிலிருந்தமை தெரிய வந்ததாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் கால்நடை சத்திரசிகிச்சை வைத்தியர் சந்தன ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்ததாக டெய்லி மிரருக்கு அவர் தெரிவித்தார். அதன் தந்தங்கள் மற்றும் தலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 9 அடி 2 அங்குல உயரம் கொண்ட 45 – 50 வயதுக்கு இடைப்பட்ட இந்த யானை, கலா வெவ நீர்த்தேக்கத்தில் ஏற்பட்ட கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கஹல்ல பல்லேகல சரணாலயத்திற்கு மாற்றப்பட்டது.
நவம்பர் 29 ஆம் திகதி வனவிலங்கு அதிகாரிகள் யானையின் தலையை தந்தங்களுடன் அகற்றி கல்கிரியாகம வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, தலை பாதுகாப்பாகப் புதைக்கப்பட்டது. தந்தங்களை பாதுகாப்பாக மீட்பதற்காக, பின்னர் தோண்டி எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக யானை இறந்ததை வைத்தியர் ஜெயசிங்க உறுதிப்படுத்தினார்.
இந்த மரணம் தொடர்பில் காப்புறுதி நிறுவனமொன்றின் முகாமையாளர் கைது செய்யப்பட்டு நவம்பர் 29 ஆம் திகதி கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவர் டிசம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதனையடுத்து பொலிஸார் அவரது வீட்டில் கம்பிகள் உட்பட பல மின் சாதனங்களை கண்டுபிடித்தமையும் குறிப்பிடத்தக்கது.

