Last Updated:
சிஎன்என்-நியூஸ்18 மற்றும் பிவால்யூ இணைந்து நடத்திய She Shakti Suraksha கருத்துக்கேட்பில், 20 நகரங்களில் 82% பெண்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள 20 பெருநகரங்களில் வாழும் 82 சதவீத பெண்கள் பாதுகாப்பான சூழலை உணர்வதாக நியூஸ்18 நடத்திய She Shakti Suraksha கணக்கெடுப்பில் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சிஎன்என்-நியூஸ்18, பிவால்யூவுடன் இணைந்து She Shakti Suraksha கருத்துக்கேட்பு நடத்தியது. நாடு முழுவதும் 10க்கும் மேற்பட்ட வெவ்வேறு இந்திய மொழிகள் பேசும் சுமார் 8 ஆயிரம் பெண்களிடம் தொலைபேசி வாயிலாக இந்த கருத்து கேட்கப்பட்டது. அதன்படி, பெண்கள் அதிகம் பாதுகாப்பாக உணரும் முதல் 3 இடங்களில் அகமதாபாத், இந்தூர், மும்பை ஆகியவை இடம் பிடித்துள்ளன.
நாடு முழுவதும் உள்ள 20 நகரங்களில் உள்ள 82 சதவீத பெண்கள் பாதுகாப்பான சூழலை உணர்வதாகவும், 6 சதவீத பெண்கள் பாதுகாப்பற்ற சூழலை உணர்வதாகவும் கருத்துக்கேட்பு மூலம் தெரியவந்துள்ளது. பகல் நேரத்தில் தங்கள் நகரம் பாதுகாப்பானது என்று 82 சதவீதம் பேரும் பகலில் கூட வெளியே செல்லமுடியாத சூழல் உள்ளதாக 4 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். இதேபோல் இரவு நேரத்தில் கூட தங்களால் பாதுகாப்பாக வெளியே செல்ல முடியும் என்று 48 சதவீதம் பேரும் 23 சதவீதம் பேர், இரவு பாதுகாப்பற்றது என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழக அரசின் இரண்டு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!
மேலும் தங்கள் சுற்றுப்புறம் பாதுகாப்பானது என்று 82 சதவீதம் பெண்களும், போக்குவரத்தின் போது பாதுகாப்பான சூழல் உள்ளதாக 44 சதவீத பெண்களும் தெரிவித்துள்ளனர். கல்வி நிறுவனங்களில் தங்களுக்கு பாதுகாப்பு உள்ளதாக 87 சதவீதம் பெண்களும் வேலை செய்யும் இடங்களில் பாதுகாப்பாக உள்ளதாக 92 சதவீதம் பெண்களும் கூறியுள்ளனர்.
March 07, 2025 12:32 PM IST


