வட்டியிலிருந்து மட்டும் சுமார் ரூ.50 லட்சம்: உங்கள் மகள் பிறந்த 90 நாட்களுக்குப் பிறகு இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர் தனது 21-வது வயதை அடையும் போது, உங்களிடம் ஒரு பெரிய நிதி சேர்ந்திருக்கும். நீங்கள் மாதம் ரூ.12,500 வீதம் முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.22.5 லட்சத்தை முதலீடு செய்திருப்பீர்கள். ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டி விகிதத்தின் அடிப்படையில், 21 ஆண்டுகள் முடிவில் உங்கள் மகளுக்கு சுமார் ரூ.71.8 லட்சம் நிதி சேர்ந்திருக்கும். இதில், சுமார் ரூ.49.3 லட்சம் வட்டியின் மூலமாகவே கிடைத்திருக்கும். அரசு ஆதரவு கொண்ட இந்தத் திட்டம், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. மகளின் பெயரில் கணக்கைத் தொடங்கலாம். இந்தக் கணக்கை போஸ்ட் ஆபிஸ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிலோ தொடங்க முடியும்.


