நீங்கள் தினமும் ரூ.333 சேமித்தால், அது மாதத்திற்குச் சுமார் ரூ.10,000 ஆகும். இந்தத் தொகையை 5 ஆண்டுகளுக்கு போஸ்ட் ஆபிஸ் தொடர் சேமிப்புக் கணக்கில் (RD) டெபாசிட் செய்தால், அசல் ரூ.6 லட்சம் மற்றும் வட்டி ரூ.1,13,659 சேர்த்து, மொத்தம் ரூ.7,13,659 ஆகும். இதே முதலீட்டை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், அசல் ரூ.12 லட்சம் மற்றும் வட்டியுடன் கூடிய மொத்த நிதி ரூ.17,08,546-ஐ எட்டும்.


