Last Updated:
பிரதமர் நரேந்திர மோடியின் சாதனையை பாராட்டும் வகையில் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுதந்திர இந்தியாவில் அதிக நாட்கள் பிரதமராக பதவி வகித்த தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய அமைச்சர்கள் கரவொலி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்திய பிரதமராக தொடர்ந்து 4,399 நாட்களை கடந்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜூன் 10) புது வரலாறு படைத்தார். இதையடுத்து டெல்லியில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுந்து நின்று கரவொலி எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடியின் சாதனையை பாராட்டும் வகையில் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், பாமக தலைவர் அன்புமணி, அதிமுக எம்பி தம்பிதுரை உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
#WATCH | Delhi: NDA leaders from across the country congratulate Prime Minister Narendra Modi on becoming India’s longest-serving Prime Minister.
Prime Minister Narendra Modi completed 4,399 days in office. This surpassed the record set by the country’s first Prime Minister,… pic.twitter.com/nn4AAmguh7— ANI (@ANI) June 10, 2026
அதேபோல், நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். தன் பதிவில் கமல்ஹாசன், “இந்தியாவின் மிக நீண்ட காலம் தொடர்ச்சியாகப் பணியாற்றிய பெற்றுள்ள, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரான நரேந்திர மோடி அவர்களுக்கு என் வாழ்த்துகள். நம்மைப் போன்ற பல்வேறு தன்மைகள் கொண்ட ஒரு ஜனநாயக நாட்டில், மக்களின் தொடர் நம்பிக்கையைப் பெறுவது ஒரு மிகப்பெரிய சாதனை ஆகும். நம் அனைவரின் கூட்டு கவனமும் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சக குடிமக்களின் நல்வாழ்வை நோக்கியே இருக்கட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
சுதந்திர இந்தியாவில் பிரதமர் மோடி செய்த சாதனை… கரவொலி எழுப்பி வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர்கள்!


