ஒவ்வொரு குடும்பமும் தற்போது தங்கள் சேமிப்பு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், தங்கள் முதலீடுகளிலிருந்து நல்ல வருமானம் பெற வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். மேலும், ஏறக்குறைய அனைவரும் பாதுகாப்பான முறையில் பெரிய வருமானத்தைப் பெறக்கூடிய ஒரு இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அந்தவகையில், பெரிய வருமானம் என்று வரும்போது, நம் மனதில் முதலில் தோன்றுவது பங்குச் சந்தையில் முதலீடு செய்வதுதான். ஆனால், அது சந்தை ஏற்ற இறக்கங்களுடன் தொடர்புடையது. எனவே, அதில் ரிஸ்க் இருக்கலாம். நீங்கள் பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய விரும்பினால், வங்கி நிலையான வைப்புத்தொகைகள், போஸ்ட் ஆபிஸ் கால வைப்புத் தொகைகள் அல்லது தொடர் வைப்புத்தொகைகள் ஆகியவை நாட்டில் உள்ள கோடிக்கணக்கான நடுத்தர மக்களின் நம்பிக்கையாக உள்ளன.


