• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Nana Patekar: நானா படேகரின் கடைசி 300 நிமிடங்கள்! நள்ளிரவில் நடந்தது என்ன? மருத்துவர் விளக்கம் | Nana Patekar Died: Manipal doctor reveals what happened to him

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Nana Patekar: நானா படேகரின் கடைசி 300 நிமிடங்கள்! நள்ளிரவில் நடந்தது என்ன? மருத்துவர் விளக்கம் | Nana Patekar Died: Manipal doctor reveals what happened to him
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Vishnupriya R

Time
Updated: Thursday, October 8, 2026, 17:04 [IST]

கோவா: காலா பட வில்லனும் பிரபல நடிகருமான நானா படேகரின் இறுதி நிமிடங்கள் குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சேகர் சல்கர் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு கடைசி நிமிடத்தில் கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.

இந்தி, மராத்தி திரையுலகில் பல ஆண்டுகளாக தனது தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்தவர் நானா படேகர். இவர் பரிந்தா, கிராந்திவீர், அப் தக் சப்பந் ஹீ, பிரஹார், வெல்கம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

Nana Patekar Died

அது போல் தமிழில் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்திலும் ரஜினி நடித்த காலா படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மூன்று தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

நானா படேகருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இவர் கோவாவின் டோனா பவுலா பகுதியில் உள்ள தனது வீட்டில் மயங்கிய நிலையில் இருந்தாராம். இதையடுத்து உடனடியாக கோவாவில் உள்ள மணிபால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

காப்பாற்ற முடியவில்லை

அங்கு அவரை காப்பாற்ற முயன்றும் அவர் காலமாகிவிட்டார். இவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சேகர் சல்கர் விளக்கியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: இன்று நள்ளிரவு 2.30 மணிக்கு படேகரின் நண்பர் ஒருவர் எனக்கு மெசேஜ் அனுப்பினார். அதில் படேகருக்கு உடல்நிலை சரியில்லை என குறிப்பிட்டிருந்தார்.

பொம்மலாட்டம் முதல் காலா வரை.. மறக்க முடியாத நடிப்பு! நடிகர் நானா படேகர் யார் தெரியுமா?

பொம்மலாட்டம் முதல் காலா வரை.. மறக்க முடியாத நடிப்பு! நடிகர் நானா படேகர் யார் தெரியுமா?

நடந்தது என்ன?

மேலும் நானா, தனக்கு இடது பக்கம் நெஞ்சு பகுதியில் அதிக வலி இருப்பதாக நண்பருக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். ஆனால் நானாவின் நண்பர் அந்த மெசேஜை உடனடியாக பார்க்கவில்லை. அதிகாலை 4 மணிக்கு பார்த்துள்ளார். உடனே அதிகாலை 4 மணிக்கு படேகரின் நண்பர் அவரது வீட்டிற்குச் சென்றார். அங்கு படேகருக்கு உடல் முழுவதும் வியர்த்து, சுயநினைவை இழந்துவிட்டார். நானாவின் கேர் டேக்கரை வரவழைத்தார். வீட்டில் வைத்தே நானாவுக்கு சிபிஆர் செய்யப்பட்டதாம். ஆனால் நானா சுயநினைவுக்கு வரவில்லை. இதையடுத்து சிபிஆர் செய்து கொண்டே ஆம்புலன்ஸ் மூலம் அவர் மணிபால் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

அங்கு அவர் மூர்ச்சையான நிலையில் கொண்டு வரப்பட்ட போதிலும் அவருக்கு 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை சிபிஆர் சிகிச்சை அளித்தோம்.

இதயம் துடிக்கவில்லை

ஆனால் அவரது இதயம் துடிக்கவில்லை. இதையடுத்து அவர் இறந்துவிட்டதாக காலை 5.20 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தோம். எங்களால் முடிந்த அளவுக்கு அவரை காப்பாற்ற போராடினோம். அவர் எப்படி இறந்தார் என தெரியவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த காவல் துறை மணிப்பால் மருத்துவமனைக்கு வந்து கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவை முடிந்ததும், அவரது உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்.. ரஜினியின் காலா பட வில்லன்.. ரசிகர்கள் சோகம்

பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்.. ரஜினியின் காலா பட வில்லன்.. ரசிகர்கள் சோகம்

பிரதமர் மோடி

நானா படேகரின் இறப்புக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: நானா படேகரின் திரையுலக பங்களிப்பை மறக்க முடியாது. அவரது மறைவு கலை உலகிற்கு பேரிழப்பாகும். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் ஈடு இணையற்ற நடிப்பை தந்தார். தலைமுறைகளை கடந்தும் அவர் நினைவுக்கூரப்படக் கூடியவர். அவரது குடும்பத்தினர், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரஜினி இரங்கல்

அது போல் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எனது அன்பு நண்பர் நானாஜி இனி நம்முடன் இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என தெரிவித்துள்ளார்.

English summary

What happened to Nana Padekar? How he died?, explains Manipal Doctor Shekhar Salkar.

Read More

Previous Post

பிக்குகளின் சிறை நடைமுறையில் மாற்றம் | Tamilmirror Online

Next Post

Air India: மீண்டும் விமானங்கள் ரத்து.. சவுதி அரேபியாவுக்குச் செல்வோர் உஷார்..!! | Air India Suspends Saudi Arabia Flights Until Oct 10 After Houthi Missile Strikes Riyadh Airport

Next Post
Air India: மீண்டும் விமானங்கள் ரத்து.. சவுதி அரேபியாவுக்குச் செல்வோர் உஷார்..!! | Air India Suspends Saudi Arabia Flights Until Oct 10 After Houthi Missile Strikes Riyadh Airport

Air India: மீண்டும் விமானங்கள் ரத்து.. சவுதி அரேபியாவுக்குச் செல்வோர் உஷார்..!! | Air India Suspends Saudi Arabia Flights Until Oct 10 After Houthi Missile Strikes Riyadh Airport

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin