Air India: மீண்டும் விமானங்கள் ரத்து.. சவுதி அரேபியாவுக்குச் செல்வோர் உஷார்..!!
வளைகுடா நாடுகளுக்கான விமானச் சேவை ஈரான் போர் துவங்கிய போது பெரியளவில் பாதிக்கப்பட்டது நினைவிருக்கும். தற்போது மீண்டும் இதே நிலை உருவாகியுள்ளது. யெமன் நாட்டின் ஹவுதி படைகள் கடந்த 3 நாட்களாகச் சவுதி அரேபியா நாட்டின் தலைநகரான ரியாத் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களையும் விமான நிலையங்களையும் குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்துவதால் சவுதி அரேபிய வான்பரபப்பில் விமானத்தை இயக்குவது பெரும் அச்சறுத்தலாக மாறியுள்ளது.
இன்று ரியாத் நகரில் பல்வேறு இடங்களில் பலத்த சத்தங்கள் உடன் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இதில் முக்கியமாக ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் தாக்குதலுக்கு உள்ளானது. பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹவுதி அமைப்பினரே தெரிவித்துள்ளனர்.

இதன் எதிரொலியாக, டெல்லியில் இருந்து ரியாத் நோக்கி இன்று மதியம் 1.45 மணிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் AI2243 என்ற விமானம், குஜராத் வான்பகுதியைத் தாண்டி அரபிக்கடல் பகுதிக்குள் சென்றது, அப்போது விமான கட்டுப்பாட்டுத் தளத்தில் இருந்து ரியாத் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல் குறித்த எச்சரிக்கை சிக்னல் வந்த காரணத்தால் மீண்டும் டெல்லிக்கு பாதுகாப்பாகத் திருப்பப்பட்டு உள்ளது.
இதனால் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் ரியாத்துக்கான விமானச் சேவைகளை அக்டோபர் 10-ம் தேதி வரை முழுமையாக நிறுத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2 நாட்களாக ஹவுதி படைகள் ரியாத் நகரில் இருக்கும் அப்ஹா சர்வதேச விமான நிலையம் மற்றும் கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் மூலம் 3 பேர மரணம் அடைந்துள்ளனர், 36 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சவுதி விமான நிலைய தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஹவுதி படையினர் கூறுகையில் கடந்த 24 மணிநேரத்தில் சவுதி அரேபியா சுமார் 60 ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 2 நாட்களுக்குச் சவுதி அரேபியாவுக்கான விமானச் சேவை பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
ஏர் இந்தியா இன்று வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில் தனது உள்நாட்டுச் சேவைக்கான எரிபொருள் சர்சார்ஜ் 1200 ரூபாயாகவும், வெளிநாட்டு விமானச் சேவைக்கு 215 டாலராகவும் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இப்புதிய கட்டணம் அக்டோபர் 9ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது எனவும் தெரிவித்துள்ளது.

