• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பிக்குகளின் சிறை நடைமுறையில் மாற்றம் | Tamilmirror Online

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
பிக்குகளின் சிறை நடைமுறையில் மாற்றம் | Tamilmirror Online
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிக்குகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படும் விதம் மற்றும் சிறைச்சாலைகளில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் நடைமுறைகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்து, புதிய நிலையான கட்டளைகளை உருவாக்குவதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தீர்மானித்துள்ளார்.


மகா சங்கத்தினருடன் வியாழக்கிழ​மை (8) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.


சட்டமா அதிபர், நீதி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, பௌத்த அலுவல்கள் அமைச்சு, சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் ஆகியோரை உள்ளடக்கியதாக இக்குழு அமைக்கப்படவுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் தற்போதைய நடைமுறைகளை ஆராய்ந்து, தேவையான சட்டத் திருத்தங்களை முன்வைக்குமாறு குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


குறிப்பாக, பிக்குகளை சிறைச்சாலைகளில் இருந்து நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது காவி உடை அணிய அனுமதிக்கப்படாதமை தொடர்பில் மகா சங்கத்தினர் எழுப்பிய கவலைகளும் இதன்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.


தற்போதைய சிறைச்சாலை சட்டங்கள் 1877ஆம் ஆண்டின் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன், அவை காலத்துக்கு ஏற்ப பல்வேறு சந்தர்ப்பங்களில் திருத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


மேலும், தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் பொதுவான கைதிகளை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளன என்றும், பிக்குகளுக்கு ஏற்புடைய விசேட ஏற்பாடுகள் குறைவாகவே உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.


“சட்டம் காலத்திற்குப் பொருத்தமானதாக இல்லாவிட்டால், உரிய முறையில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதே சரியான வழியாகும். தனிப்பட்ட நபர்களுக்காக உத்தரவுகளைப் பிறப்பித்து சட்டத்தை மாற்ற நான் விரும்பவில்லை” என ஜனாதிபதி தெரிவித்தார்.


எனவே, பிக்குகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படும் முறை மற்றும் அவர்களை வெளியில் அழைத்துச் செல்லும் நடைமுறைகள் தொடர்பில், ஒருவரை இலக்காகக் கொள்ளாமல், அனைவருக்கும் பொதுவாகப் பொருந்தக்கூடிய புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.


வண. கலகொடஅத்தே ஞானசார தேரரை காவி உடையின்றி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய சம்பவத்தைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகள் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைமைகள் ஏற்படுவதைத் தடுப்பது தொடர்பிலும் சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.


மகா சங்கத்தினரும், இந்த விவகாரத்தில் உடனடி தீர்வை நோக்கி நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி மற்றும் ஆசீர்வாதங்களைத் தெரிவித்தனர். அமைச்சர்களான ஹினிதும சுனில் செனெவி மற்றும் ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்டோரும் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.












Read More

Previous Post

கிழக்கு மலேசியாவில் பணிக்கு வருகை தரும் மருத்துவர்களின் விவரங்களை மலேசிய மருத்துவ சங்கம் கோருகிறது. – Malaysiakini

Next Post

Nana Patekar: நானா படேகரின் கடைசி 300 நிமிடங்கள்! நள்ளிரவில் நடந்தது என்ன? மருத்துவர் விளக்கம் | Nana Patekar Died: Manipal doctor reveals what happened to him

Next Post
Nana Patekar: நானா படேகரின் கடைசி 300 நிமிடங்கள்! நள்ளிரவில் நடந்தது என்ன? மருத்துவர் விளக்கம் | Nana Patekar Died: Manipal doctor reveals what happened to him

Nana Patekar: நானா படேகரின் கடைசி 300 நிமிடங்கள்! நள்ளிரவில் நடந்தது என்ன? மருத்துவர் விளக்கம் | Nana Patekar Died: Manipal doctor reveals what happened to him

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin