Last Updated:
ஹார்முஸ் நீரிணையை கட்டணமின்றி திறந்துவிடுவதில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் இறுதி ஒப்பந்தம் ஏற்படாது என்றும் ஜே.டி.வான்ஸ் தெரிவித்தார்.
இடைக்கால அமைதி ஒப்பந்தப்படி ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், ஒரே நாளில் ஒரு கோடியே 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஹார்முஸ் நீரிணையை கடந்து சென்றது.
அமெரிக்கா – ஈரான் இடையே இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதைத்தொடர்ந்து ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அதேநேரம் ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்படுவதைக் கண்காணிப்பதற்காக அமெரிக்க கப்பல்கள் அப்பகுதியில் தங்கியிருக்கும் என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ஈரானுடனான ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்காவிற்கு வெற்றி கிடைத்திருப்பதாகக் கூறினார். இறுதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான 60 நாள் காலக்கெடு இந்திய நேரப்படி நேற்று முதல் தொடங்கியதாகவும் தெரிவித்தார். ஹார்முஸ் நீரிணையை கட்டணமின்றி திறந்துவிடுவதில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் இறுதி ஒப்பந்தம் ஏற்படாது என்றும் ஜே.டி.வான்ஸ் தெரிவித்தார். ஈரானியர்கள் தங்கள் நடத்தையை மாற்றிக் கொள்ளாவிட்டால், அவர்களின் ராணுவமும் அணுசக்தித் திட்டமும் அழிக்கப்பட்டுவிடும் என்று ஜே.டி.வான்ஸ் எச்சரித்தார்.


