Last Updated:
CSK vs SRH | ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணி ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 26வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கடைசியாக விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முழு பார்மில் உள்ள பெங்களூரு அணிக்கு டெல்லி ஈடுகொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சொந்த ஊரில் விளையாடுவது பெங்களூரு அணிக்கு கூடுதல் வசதியாக இருந்தாலும் டெல்லி அணியும் கடும் நெருக்கடி கொடுக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் சென்னை – ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. சீசன் தொடக்கத்தில் தோல்வியை தழுவிய சென்னை அணி, கடைசி இரண்டு ஆட்டங்களில் முழு பார்மையும் வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடி வருகிறது.
உள்ளூரில் விளையாடுவது ஐதாராபாத் அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி நடப்பு சீசனில் ஹாட்ரிக் வெற்றியை சென்னை பெறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


