EZ Cash முறையைப் பயன்படுத்தி சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வெலிகம, பாதேகம பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் தொடர்பிலேயே இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை மா அதிபருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய மேற்படி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள்
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் இணையவழி மோசடி விசாரணைப் பிரிவு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்ட சொத்து, முடக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வெஹேன, பாதேகம பகுதியில் அமைந்துள்ள 150 இலட்சம் ரூபாவிற்கும் (15 மில்லியன்) அதிக பெறுமதியுடைய வீடு ஒன்று இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 2026 செப்டம்பர் 04 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 14 நாட்களுக்கு இந்த வீட்டைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முடக்க உத்தரவைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு பிறப்பித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21

