• Login
Tuesday, July 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மக்களே இனி இந்த ரூபாய் நோட்டுகள் எல்லாம் பிளாஸ்டிக்கா மாற போகுது..!! மத்திய அரசு அறிவிப்பு..!! | RBI Gets Govt Nod for 10 and 20 Rupee Polymer Notes Trial; Paper Currency Will Stay for Now

GenevaTimes by GenevaTimes
July 28, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மக்களே இனி இந்த ரூபாய் நோட்டுகள் எல்லாம் பிளாஸ்டிக்கா மாற போகுது..!! மத்திய அரசு அறிவிப்பு..!! | RBI Gets Govt Nod for 10 and 20 Rupee Polymer Notes Trial; Paper Currency Will Stay for Now
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மக்களே இனி இந்த ரூபாய் நோட்டுகள் எல்லாம் பிளாஸ்டிக்கா மாற போகுது..!! மத்திய அரசு அறிவிப்பு..!!

இந்தியாவின் வரலாற்றிலேயே முதல்முறையாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வர இருக்கின்றன. ரூபாய் நோட்டு பயன்பாடு தொடங்கியது முதலே பேப்பரில் அச்சடிக்கபப்ட்ட தாள்களை தான் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் ரிசர்வ் வங்கி புதிய முயற்சியாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசும் அனுமதி தந்துள்ளது.

மக்களவையில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் தொடர்பாக எழுப்பபப்ட்ட கேள்விக்கு மத்திய நிதி துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி விளக்கம் தந்துள்ளார். அதில் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் முறையில் புதிய மாற்றத்தை கொண்டுவரும் முயற்சியாக, 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை ‘பாலிமர்’ (பிளாஸ்டிக்) தாளில் அச்சிட்டு சோதனை மேற்கொள்ள ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என கூறியுள்ளார்.

மக்களே இனி இந்த ரூபாய் நோட்டுகள் எல்லாம் பிளாஸ்டிக்கா மாற போகுது..!! மத்திய அரசு அறிவிப்பு..!!

பாலிமர் நோட்டுகள் பிளாஸ்டிக் போன்ற ஒரு வகையான நீடித்த உழைக்கக்கூடிய பொருளால் ஆனவை. இவை சாதாரண காகித நோட்டுகளை விட அதிக காலம் உழைக்கக்கூடியவை மற்றும் எளிதில் கிழிந்துபோகாது. இதனால் தான் சோதனை முயற்சியாக ரிசர்வ் வங்கி இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

முதல் கட்டமாக 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் பிளாஸ்டிக் நோட்டுகளாக மாறும் நிலையில் தற்போது புழக்கத்தில் உள்ள காகித நோட்டுகள் திரும்ப பெறப்படுமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கும் அரசு விளக்கம் தந்துள்ளது. முழுமையாக அனைத்து ரூபாய் நோட்டுகளையும் பிளாஸ்டிக் நோட்டுகளாக மாற்றும் திட்டம் இல்லை என கூறும் அரசு, தற்போதுள்ள காகித நோட்டுகளுடன் இவை கூடுதலாகவே புழக்கத்தில் இருக்கும் என கூறியுள்ளது.

தலா 100 கோடி எண்ணிக்கையிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சிட்டு சோதனை செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்த பிறகு, இவை முழு அளவில் புழக்கத்திற்கு வரும். சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, காகித நோட்டுகளை விட பாலிமர் நோட்டுகள் நீண்ட காலம் உழைக்கக்கூடியவை மற்றும் அதிகம் நீடித்து இருக்கக்கூடியவை என நிரூபணம் ஆனதால் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

பிளாஸ்டிக் நோட்டுகளின் அறிமுகம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பாதிக்குமா என்ற கேள்விக்கு, இது ஆரம்பகட்ட ஆய்வு மட்டுமே என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு காகித நோட்டுகள் மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறைகள் என இரண்டுமே பொதுமக்களுக்கு இணையாக தொடர்ந்து செயல்படும் என கூறியுள்ளது.

அண்மையில் தான் ரிசர்வ் வங்கி பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் மற்றும் மூலப்பொருட்களை சர்வதேச அளவில் டெண்டர் கோரியிருந்தது. இதில் தேசிய பாதுகாப்பு கருதி கடுமையான விதிகள் விதிக்கப்பட்டன. இந்த தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் அரசு பாதுகாப்பு அனுமதியை பெற்றிருக்க வேண்டும். சீனா அல்லது பாகிஸ்தானுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்க வேண்டும். இந்த நோட்டுகளுக்கான மூலப்பொருட்களை சீனா, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் எளிதில் சேதமடையாது. இதன் மூலம் ரூபாய் நோட்டுகளை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் குறைந்து, நீண்ட கால அடிப்படையில் பணத்தை அச்சிடும் செலவு குறையும் என ரிசர்வ் வங்கி கருதுகிறது.

Share This Article

English summary

RBI Gets Govt Nod for 10 and 20 Rupee Polymer Notes Trial; Paper Currency Will Stay for Now

மக்களே இனி இந்த ரூபாய் நோட்டுகள் எல்லாம் பிளாஸ்டிக்கா மாற போகுது..!! மத்திய அரசு அறிவிப்பு..!!- The Indian government has approved the RBI’s field trials for 10 rupee and 20 rupee polymer notes, with one billion pieces each set to be tested. Officials clarified that polymer banknotes will not replace paper currency at this stage.

Story first published: Tuesday, July 28, 2026, 7:55 [IST]

Other articles published on Jul 28, 2026

Read More

Previous Post

மேகதாது விவகாரம்: தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகாவிற்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தல் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ஆற்றில் டைவ் அடித்தால் பரிசு… பின்னணியில் வரலாற்று காரணம்… சுவாரஸ்ய தகவல்! | World News (உலக செய்திகள்)

Next Post
ஆற்றில் டைவ் அடித்தால் பரிசு… பின்னணியில் வரலாற்று காரணம்… சுவாரஸ்ய தகவல்! | World News (உலக செய்திகள்)

ஆற்றில் டைவ் அடித்தால் பரிசு... பின்னணியில் வரலாற்று காரணம்... சுவாரஸ்ய தகவல்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin