குவைத் மீதான தாக்குதல்கள் மற்றும் பிராந்தியத்தில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியிலும், ஈரானுடன் ஒரு புதிய உடன்படிக்கையை எட்டுவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் ஒரு கட்டத்தில், ஈரானின் உச்சத் தலைவருடன் நேரடியாகப் பேசுவதைக் கூட தான் நிராகரிக்கப் போவதில்லை என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபரின் இந்த அணுகுமுறை, இரு நாடுகளுக்கும் இடையே மிக விரைவில் ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகக்கூடும் என்பதையே காட்டுவதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒப்புக்கொண்ட ட்ரம்ப்
குவைத் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், அமெரிக்கா தான் ஈரானை மிகவும் கடுமையாகத் தூண்டிவிட்டதாகவும், அதன் விளைவாகவே இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

Image Credit: BBC
ஆரம்பத்தில், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் அனைத்தும் அமெரிக்கப் படைகளால் நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அவை இலக்குகளைத் தாக்கவில்லை என்றும் அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) தெரிவித்திருந்தது.
ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே குவைத் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளில் மிக மோசமான சேதங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

