• Login
Sunday, September 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஹோம் லோன் Vs ப்ராப்பர்ட்டி லோன்.. யார் எதைத் தேர்ந்தெடுக்கலாம்? வட்டி எப்படி இருக்கும்? | Home Loan vs Property Loan: which long suits for you?

GenevaTimes by GenevaTimes
September 20, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஹோம் லோன் Vs ப்ராப்பர்ட்டி லோன்.. யார் எதைத் தேர்ந்தெடுக்கலாம்? வட்டி எப்படி இருக்கும்? | Home Loan vs Property Loan: which long suits for you?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹோம் லோன் Vs ப்ராப்பர்ட்டி லோன்.. யார் எதைத் தேர்ந்தெடுக்கலாம்? வட்டி எப்படி இருக்கும்?

இன்றெல்லாம் பலருக்கு தங்களுடைய பணத் தேவையைப் பூர்த்தி செய்ய உதவி கொண்டிருப்பது ஹோம் லோன் மற்றும் ப்ராப்பர்ட்டி லோன் தான். இந்த இரண்டுமே உங்களுடைய சொத்தை அடமானமாக வைத்து வாங்கப்படும் கடன்கள் ஆகும். ஆனால் இந்த இரண்டு கடனின் பயன்பாடும் வித்தியாசமானது. ஹோம் லோன் என்பது ஒரு சொத்தை வாங்குவதற்கு அல்லது வீடு கட்டுவதற்கு பெறப்படும் லோன். அதுவே ப்ராப்பர்ட்டி லோன் என்பது ஒரு ப்ராப்பர்ட்டியை அடமானம் வைத்து அந்த பணத்தை எதற்காக வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்தலாம்.

இந்த இரண்டில் எதை தேர்ந்தெடுப்பது என்பது உங்களுடைய தேவையை பொருத்தது. நீங்கள் ஒரு வீட்டை வாங்க இருந்தால் ஹோம் லோன் பொருத்தமானதாக இருக்கும். அதுவே வேறு விஷயத்திற்காக பணம் தேவைப்பட்டால் உங்களுடைய ப்ராப்பர்ட்டியை அடமானம் வைக்கலாம். இந்த பதிவில் யாருக்கு எந்த லோன் ஏற்றது என்பதைப் பார்ப்போம்.

ஹோம் லோன் Vs ப்ராப்பர்ட்டி லோன்.. யார் எதைத் தேர்ந்தெடுக்கலாம்? வட்டி எப்படி இருக்கும்?

ஹோம் லோன் என்பது வீடு வாங்குவதற்கும், வீடு கட்டுவதற்கும் வங்கிகள் கொடுக்கும் பிரத்யேக லோன்களாகும். கடன் பெறுபவருக்கு நல்ல சிபில் ஸ்கோர் இருந்து.. கடனை திருப்பி செலுத்தும் அளவுக்கு வருமானம் இருந்தால் போதும். வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு ஹோம் லோன் வழங்கும்.

யாருக்கு எவ்வளவு கடன் வழங்கப்படுகிறது?: ஒருவரின் சொத்துக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பதை நிர்ணயிக்க வங்கிகள் லோன் டு வேல்யூ என்ற ரேஷியோவை பயன்படுத்துகின்றன. அதாவது ஹோம் லோனாக இருந்தால் இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளின் படி சொத்து மதிப்பில் 75 சதவீதம் வரை கடனாகப் பெற முடியும்.

அதுவே ப்ராப்பர்ட்டி லோனாக இருந்தால் வங்கியின் சொத்து மதிப்பீடு மற்றும் லோன் டு வேல்யூ ரேஷியோ ஆகிய இரண்டையும் வைத்து அந்த சொத்தின் மதிப்பு கணக்கிடப்படும். உதாரணமாக ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துக்கு ரூ.1 கோடி கடன் கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது. அதே நேரம் அதற்கு குறைவாக கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது. இதை நிர்ணயிக்க தான் வங்கிகள் தங்களுக்குள் ஒரு கணக்கீடு செய்து முடிவு செய்கின்றன.

எந்தக் கடனை எப்போது தேர்வு செய்வது?: வீடு வாங்க விரும்புபவர்கள், வீடு கட்ட நினைப்பவர்களுக்கு ஹோம் லோன் பொருத்தமானதாக இருக்கும். அதுவே உங்களிடம் ஒரு பிராப்பர்ட்டி இருக்கிறது அதை வைத்து நீங்கள் உங்கள் தொழிலை மேம்படுத்த நினைக்கிறீர்கள் அல்லது உங்கள் குழந்தைக்கு உயர்கல்வி வழங்க நினைக்கிறீர்கள் என்றால் பிராப்பர்ட்டியை அடமானம் வைத்து கடன் பெறலாம்.

ஆனால் எந்த சொத்தாக இருந்தாலும் சரி நீங்கள் ஈஎம்ஐ செலுத்தத் தவறும் பட்சத்தில் அந்த சொத்தை ஏலம் விட்டு வங்கிகள் பணத்தை பெற்றுக்கொண்டு பின்னர் மீதி தொகையை ஒப்படைக்கும்.

வட்டி விகிதம்: ஹோம் லோன் மற்றும் பிராப்பர்ட்டி லோன் ஆகிய இரண்டையும் ஒன்றுக்கொன்று ஒப்பிட முடியாது. ஏனெனில் இரண்டுக்குமே சொத்து அடமானமாக வைக்கப்படுகிறது. இரண்டுக்குமான வட்டி விகிதம் நீங்கள் கடன் பெறும் வங்கி, உங்களுடைய சொத்து மதிப்பு மற்றும் கடன் பெறுபவர், எதற்காக கடன் பெறுகிறார் என்ற பல விஷயங்களைப் பொறுத்து மாறுபடும்.

எதையெல்லாம் வைத்து லோனை தேர்வு செய்யக்கூடாது?:

ஈஎம்ஐ: கடன் பெறும்போது சிலர் ஈஎம்ஐ குறைவாக இருக்கிறதா? என்பதை மட்டும் கவனிக்கின்றனர். இதை மட்டும் வைத்து முடிவு எடுக்கக் கூடாது. கடன் காலம், எவ்வளவு எந்த கடனுக்கு எவ்வளவு வட்டி? என்பதையெல்லாம் பொருத்து தான் முடிவு செய்ய வேண்டும். கடன் பெறும்போது வட்டி விகிதம், பிராசசிங் கட்டணம், அபராத கட்டணங்கள், முன்கூட்டியே கடனை அடைத்தால் அதற்கு வங்கிகள் விதிக்கும் ஃபோர்க்ளோசர் கட்டணங்கள், கடன் முடிந்த பிறகு நீங்கள் மொத்தமாக செலுத்தி இருக்கும் வட்டி ஆகிய அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து தான் முடிவு எடுக்க வேண்டும்.

வரி: ஹோம் லோனுக்கு வரி சலுகைகள் கிடைக்கிறது. ஆனால் பிராப்பர்ட்டி லோனுக்கு எல்லா சலுகைகளும் கிடைப்பதில்லை. எனவே நீங்கள் பணத்தைப் பெற்று எதற்காக பயன்படுத்தப் போகிறீர்கள்? என்பதை பொறுத்தே இந்த வரிச் சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும் எனவே கடன் பெறும்போது வெறும் வட்டி விகிதம், ஈஎம்ஐ ஆகியவற்றை மட்டும் பார்க்காமல் நீங்கள் எதற்காக கடன் பெறுகிறீர்கள் என்பதையும் ஒப்பிட்டு பார்த்து முடிவெடுப்பது முக்கியம்.

Share This Article

Story first published: Sunday, September 20, 2026, 13:07 [IST]

Other articles published on Sep 20, 2026

Read More

Previous Post

பட்டு உற்பத்தியில் இந்தியாவை முதலிடத்திற்கு உயர்த்த அரசு உறுதி… மத்திய அமைச்சர் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

திடீர் கனமழையால் தலைநகரில் பரபரப்பு: பல இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் நீரில் மூழ்கின! | Makkal Osai

Next Post
திடீர் கனமழையால் தலைநகரில் பரபரப்பு: பல இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் நீரில் மூழ்கின! | Makkal Osai

திடீர் கனமழையால் தலைநகரில் பரபரப்பு: பல இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் நீரில் மூழ்கின! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin