• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஹவுதி தாக்குதல்.. சவுதி எடுத்த பிரமாஸ்திரம்! களத்தில் இறங்கிய பாகிஸ்தான் படைகள் | Houthi Attacks: Saudi Arabia’s Major Move – Pakistani Troops Deployed

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஹவுதி தாக்குதல்.. சவுதி எடுத்த பிரமாஸ்திரம்! களத்தில் இறங்கிய பாகிஸ்தான் படைகள் | Houthi Attacks: Saudi Arabia’s Major Move – Pakistani Troops Deployed
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Mani Singh S

Time
Updated: Thursday, October 8, 2026, 12:28 [IST]

ரியாத்: சவுதி அரேபியாவை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் பாகிஸ்தான் தனது படையை சவுதியில் நிறுத்தியுள்ளதாக கூறியுள்ளது. ஏற்கனவே பல ஆண்டுகளாக தங்கள் படைகள் சவுதி அரேபியாவில் நிலை கொண்டிருப்பதாகவும், பாகிஸ்தான் கூறியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவான இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் புதிய மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, குறிப்பிட்ட இந்த மூன்று நாடுகளில் எந்த ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடந்தாலும் அது மற்ற இரண்டு நாடுகளின் மீதான தாக்குதலாகவே கருதப்படும். அப்படி ஒரு தாக்குதல் நடந்தால் மூன்று நாடுகளின் ராணுவமும் இணைந்து செயல்படும்.

Houthi Attacks Saudi Arabia s Major Move - Pakistani Troops Deployed

மெக்கா, மதீனா ஆகிய புனித நகரங்களை பாதுகாப்பதே இதன் நோக்கம் என்று மூன்று நாடுகளும் குறிப்பிட்டன. அணு ஆயுத வல்லமை கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது. இன்னொரு பக்கம் பொருளாதார ரீதியில் மிகவும் வலுவாக சவுதி உள்ளது. துருக்கியும் விமானப்படையை வலுவாக வைத்துள்ளது. இந்த மூன்று நாடுகளும் இணைந்து கூட்டு ஒப்பந்தம் போட்டு இருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

சவுதி ஏர்போர்ட் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து தாக்குதல்.. 3 பேர் பலி! ஓயாத பதற்றம்

சவுதி ஏர்போர்ட் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து தாக்குதல்.. 3 பேர் பலி! ஓயாத பதற்றம்

கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், தற்போது சவுதி அரேபியா ஹவுதி கிளர்ச்சி குழுவின் இலக்காக மாறியுள்ள நிலையில், பாகிஸ்தான் படைகள் அங்கு நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறியுள்ளது. ஏமன் வடக்குப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஹவுதி கிளர்ச்சிக்குழு கடந்த 2014 ஆம் ஆண்டு சானாவை கைப்பற்றியது. தொடர்ந்து உள்நாட்டு போர் நடைபெற்று வரும் நிலையில், ஹவுதிக்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

சவுதியின் கட்டுப்பாட்டில் இருந்த ஏமனின் முக்கிய துறைமுகங்களை ஹவுதிக்கள் தங்கள் வசமாக்கினர். ஏமன் அரசு படைக்கு சவுதி ஆதரவு கொடுப்பதால் சவுதியை குறி வைத்தும் ஹவுதி கிளர்ச்சிக்குழு தாக்குதல் நடத்துகிறது. எனவே, ஹவுதி தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ள மெக்கா ஒப்பந்தப்படி உடனடியாக படைகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

ரியாத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ராணுவ ஒத்துழைப்புப் பணிகளுக்காக பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சவுதி அரேபியாவில் முன்பு இருந்தே நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். எனினும், தற்போது சவுதி அரேபியாவில் எத்தனை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உள்ளனர் என்பது குறித்தோ, அவர்கள் மேற்கொள்ளும் தனிப்பட்ட பணிகள் குறித்தோ இதுவரை எந்த விவரமும் வெளியாகவில்லை.

English summary

Houthi Attacks: Amidst intensified attacks by Houthi rebels targeting Saudi Arabia, Pakistan has announced the deployment of its troops to the Kingdom. Pakistan stated that its forces have already been stationed in Saudi Arabia for several years. This information was released by the Inter-Services Public Relations (ISPR), the media wing of the Pakistan Army.

Read More

Previous Post

பதவியிலிருந்து விலகினார் தனஞ்சய டி சில்வா

Next Post

இந்தியாவில் Starlink வர விடாமல் சதி நடக்கிறதா? எலான் மஸ்க் குற்றச்சாட்டும் அரசின் பதிலடியும்..!! | Is Ambani Blocking Starlink’s India Entry? Elon Musk Accuses ‘Certain Oligarchs’ of Delaying Launch

Next Post
இந்தியாவில் Starlink வர விடாமல் சதி நடக்கிறதா? எலான் மஸ்க் குற்றச்சாட்டும் அரசின் பதிலடியும்..!! | Is Ambani Blocking Starlink’s India Entry? Elon Musk Accuses ‘Certain Oligarchs’ of Delaying Launch

இந்தியாவில் Starlink வர விடாமல் சதி நடக்கிறதா? எலான் மஸ்க் குற்றச்சாட்டும் அரசின் பதிலடியும்..!! | Is Ambani Blocking Starlink’s India Entry? Elon Musk Accuses ‘Certain Oligarchs’ of Delaying Launch

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin