இந்தியாவில் Starlink வர விடாமல் சதி நடக்கிறதா? எலான் மஸ்க் குற்றச்சாட்டும் அரசின் பதிலடியும்..!!
எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் இணைய சேவை வழங்க தயாராகி வருகிறது. விரைவில் ஸ்டார்லிங்க் சேவை வந்துவிடும் என பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு விட்டாலும் இதுவரை அதற்கான முழு அனுமதி கிடைக்கவில்லை.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை எப்போது வரும் என பலரும் கேள்வி எழுப்பும் நிலையில் எலான் மஸ்க் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்தியாவுக்குள் தனது ஸ்டார்லிங்க் சேவை நுழைவதை தடுக்க இந்திய பெருமுதலாளிகள் யல்வதாகவும், அது இந்திய மக்களுக்கு எதிரான ‘குற்றம்’ என்றும் எக்ஸ் தளத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.

இந்தியா மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் வணிக செயல்பாடுகளின் துணை தலைவர் லாரன் ட்ரையர் , ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் சேவைகளை வழங்க தயாராக இருப்பதாகவும், இறுதி அரசாங்க அனுமதிகள் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்காக மட்டுமே காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான ஆண்டனாக்களுடன் 20 கேட்வே தளங்களை ஸ்டார்லிங்க் ஏற்கனவே அமைத்துள்ளது. அரசு ஒப்புதல்கள் கிடைத்தவுடன், கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு ஸ்டார்லிங்க் சேவை கிடைக்கும் என கூறி இருந்தார்.
இதனை குறிப்பிட்டு எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள எலான் மஸ்க், இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையின் அனுமதி தாமதமாவதற்கு காரணம் சில குறிப்பிட்ட பெருமுதலாளிகளே என குற்றம்சாட்டியுள்ளார். இந்திய சந்தையில் தங்களுடைய ஏகபோக ஆதிக்கத்தை தக்கவைத்து கொள்ளவே அவர்கள் இந்த தடையை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ள எலான் மஸ்க், இதை எளிதில் யூகித்து கொள்ள முடியும் என்றும், இது இந்திய மக்களுக்கு இழைக்கப்படும் ஒரு குற்றம் போன்றது என்றும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
Unfortunately, we are being blocked by certain oligarchs in order to maintain their monopolistic chokehold on the Indian people. You can guess who they are …This is a crime against the people of India!
— Elon Musk (@elonmusk) October 7, 2026“>
எலான் மஸ்க் தனது பதிவில் குறிப்பிட்ட அந்த நிறுவனங்கள் அல்லது நபர்களின் பெயர்களை நேரடியாக குறிப்பிடவில்லை. இந்தியாவில் தொலை தொடர்பு மற்றும் இணைய சேவையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தான் ஆதிக்கம் செலுத்துகிறது. அடுத்ததாக ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் எலான் மஸ்க் மறைமுகமாக முகேஷ் அம்பானியை சாடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஸ்டார்லிங்க் வந்துவிட்டால் தங்களின் வருமானம் பாதிக்கப்படும் என ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் மறைமுகமாக ஸ்டார்லிங்க் வருவதை தடுக்க சதி செய்கின்றனவா, இதனை தான் எலான் மஸ்க் தனது பதிவின் மூலம் கூற வருகிறாரா என நெட்டிசன் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்தியாவில் இன்னமும் பல கிராமங்களில் 4ஜி நெட்வொர்க் கவரேஜ் கூட சென்றடையவில்லை என சொல்லப்படுகிரது. ஸ்டார்லிங்க் நேரடியாக செயற்கை கோள்களில் இருந்து இணைய சேவையை வழங்குவதால் இதுவரை இணைய வசதி செல்லாத கிராமங்கள் , மலைப்பகுதிகளில் கூட இணைய இணைப்பு பெறும் என ஸ்டார்லிங்க் கூறிகிறது.
இந்தியாவில் டெலிகாம் துறையில் தனியார் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் ஆகியவை தான ஆதிக்கம் செலுத்துகின்றன. அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் இருந்தாலும் கூட தனியார் நிறுவனங்களுக்கு ஈடு கொடுத்து கட்டமைப்பு வசதிகளையும் சேவைகளையும் வழங்க முடியவில்லை.
A post is being circulated in social media regarding the fairness of India’s regulatory framework for satellite communication services and suggesting that it is being applied in a discriminatory manner. The Government has put in place a fair and non-discriminatory authorisation framework for all telecommunication services, including satellite communication services. Under this, telecom licences have been granted to three Global Mobile Personal Communication by Satellite services based on non-geosynchronous satellite orbit based satellite communications, as part of its commitment to enable provision of satellite communication services in India. Under the terms and conditions of license, every such licensee is required to demonstrate compliance with security conditions. This is aimed at ensuring that services provided meet various security requirements to ensure safety of all users and their data. Security assessment as part of this process is currently under way in respect of all the three licensees. As and when this process is completed for a licensed entity, it may proceed to the next step of seeking assignment of spectrum. At present, all the three entities are at broadly the same regulatory stage. As such, the suggestion that the framework or its application is unfair or discriminatory is baseless and misconceived: Ministry of Communications
— ANI (@ANI) October 8, 2026“>
இந்நிலையில் தான் எலான் மஸ்கின் குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெற்றது. இதற்கிடையே மத்திய அரசு இதற்கு தக்க பதிலடி தந்துள்ளது. எலான் மஸ்க் மற்றும் ஸ்டார்லிங்கை குறிப்பிடாமல் மத்திய அரசு வெளியிட்டுள்ள பதிலில், இந்தியாவில் இணைய சேவை வழங்குவதற்கான ஒப்புதல் நடைமுறைகளில் அரசு பாகுபாடு காட்டுவதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என தெரிவித்துள்ளது. அரசு அனைத்து நிறுவனங்களையும் சமமாகவே பார்க்கிறது, அனைவருக்குமே ஒப்புதல் நடைமுறைகள் சமமாகவே உள்ளன எந்த பாகுபாடும் இல்லை என கூறியுள்ளது.

