இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து தனஞ்சய டி சில்வா உடனடியாக விலகியுள்ளார்.

தெரிவுக் குழுவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார். “அணிக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு அடுத்த தலைமுறை வீரர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதே எனது உண்மையான கருத்தாகும்” என அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்களிலும் ஒரு வீரராகத் தேசிய அணியில் தொடர்ந்து இடம்பெறவுள்ளதாகவும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணிக்காகத் தொடர்ந்து விளையாடவுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தனஞ்சய டி சில்வாவின் டெஸ்ட் அணித் தலைமைத்துவத்திற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) நன்றிகளைத் தெரிவித்துள்ளதுடன், அவரது எஞ்சிய கிரிக்கெட் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வாழ்த்துகளையும் கோரியுள்ளது. “எமது டெஸ்ட் அணிக்கு அவர் வழங்கிய சிறந்த தலைமைத்துவத்திற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நன்றி தெரிவிப்பதுடன், அவரது எதிர்காலப் பயணத்திற்கு நல்வாழ்த்துகளைக் நேருகிறது” என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லே டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தனஞ்சய டி சில்வா தொடர்ந்தும் அணியில் ஒரு வீரராகச் செயற்படவுள்ள தீர்மானத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

