• Login
Sunday, September 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வெள்ளி வந்த பொற்காலம்.. ஓரம்கட்டப்பட்டும் தங்கம்.. மக்களே இதுதான் சரியான வாய்ப்பு! | Silver Might Outshines Gold This Festive Season: Why Buyers Are Switching to Silver Jewellery Ahead of Navratri

GenevaTimes by GenevaTimes
September 27, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
வெள்ளி வந்த பொற்காலம்.. ஓரம்கட்டப்பட்டும் தங்கம்.. மக்களே இதுதான் சரியான வாய்ப்பு! | Silver Might Outshines Gold This Festive Season: Why Buyers Are Switching to Silver Jewellery Ahead of Navratri
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வெள்ளி வந்த பொற்காலம்.. ஓரம்கட்டப்பட்டும் தங்கம்.. மக்களே இதுதான் சரியான வாய்ப்பு!

காலம் காலமாகத் தங்கத்தை ஒப்பிடுகையில் வெள்ளி இரண்டாம் பட்சமாகவே பார்க்கப்பட்டு வந்த நிலை விரைவில் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டுச் சந்தையில் தங்கம் எப்போதும் சூப்பர்ஸ்டார்கவே இருந்தாலும், கடந்த ஆண்டு இறுதியிலும், 2026ல் முதல் 2 மாதத்திலும் தங்கத்தின் மீது இருந்த ஸ்பாட்லைட்-ஐ வெள்ளி வாங்கிக்கொண்டு ஒரு கிலோ 4.40 லட்சம் வரையில் வரலாறு காணாத விலையில் விற்கப்பட்டது.

ஆனால் ஈரான் போர் துவங்கிய பின்பு, கச்சா எண்ணெய் விலை உயர்ந்த பின்பு தங்கத்தைக் காட்டிலும் வெள்ளி விலை வேகமாகக் குறைந்து தற்போது 2.5 லட்சம் ரூபாய் அளவில் வர்த்தகமாகி வருகிறது.

தங்கம் விலை தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் காரணத்தால் மக்களும் சரி, நகைக் கடைகளும் சரி முக்கியமான மாற்றத்தை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

 வெள்ளி வந்த பொற்காலம்.. ஓரம்கட்டப்பட்டும் தங்கம்.. மக்களே இதுதான் சரியான வாய்ப்பு!

பொதுவாக வெள்ளியில் பாத்திரங்கள் தான் அதிகளவில் ரீடைல் சந்தையில் விற்கப்படும், நகைகள் என்பது மிகவும் சிறிய அளவிலான வர்த்தக சந்தை கொண்டது. தங்கம் விலை அதிகரித்துள்ள காரணத்தால் வெள்ளி உலோகத்தில், தங்க முலாம் பூசப்பட்ட நகைகள் அதிகளவில் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வரத் துவங்கியுள்ளது.

நகைகள் தாண்டி சிலைகள், பர்னிச்சர்கள் எனச் சாமானிய மக்கள் முதல் பெரும் பணக்காரர்களை ஈர்க்கும் வகையில் நகைக் கடைகள் வெள்ளியில் அதிகப்படியான பொருட்களைத் தயாரித்து சந்தைக்குக் கொண்டு வரத் துவங்கியுள்ளனர். இதனால் தங்கத்தை வாங்க முடியாத மக்கள் அதிகளவில் தற்போது வெள்ளி நகைகள் மீது ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர்.

நகைக் கடைகள் அனைத்தும், அக்டோபர் மாதம் துவங்க உள்ள நவராத்திரி பண்டிகையை டார்கெட் செய்து களத்தில் இறங்கியுள்ளனர், பல நகைக் கடை உரிமையாளர்களும், சந்தை நிபுணர்களும் இந்த பண்டிகை காலத்தில் வெள்ளி நகைகளுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனால் ரீடைல் சந்தையில் தங்கத்திற்கு இணையான டிமாண்ட் வெள்ளிக்கு மாற உள்ளதால் வெள்ளிக்கான டிமாண்ட் இந்தியாவில் அதிகரித்து அதன் விலையும் உயரும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் தங்கத்தில் இருந்து வெள்ளிக்கு மாறும் முக்கியமான கட்டத்தில் இந்தியா தற்போது உள்ளதால், இந்த மாற்றம் எத்தகைய தாக்கத்தைச் சந்தையில் ஏற்படுத்தும் என்பதைக் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 வெள்ளி வந்த பொற்காலம்.. ஓரம்கட்டப்பட்டும் தங்கம்.. மக்களே இதுதான் சரியான வாய்ப்பு!

இந்தியாவில் தற்போது 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1.5 லட்சம் ரூபாய், ஆனால் இதே தொகைக்கு 650 கிராம் தங்கத்தை வாங்க முடியும். வட இந்தியாவில் குறிப்பாக நவராத்திரி பண்டிகை பெரிய அளவில் கொண்டாடப்படும் குஜராத்தில் பல நகைக் கடைகளில் வெள்ளி நகைகளுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளதாகவும், மொத்த விற்பனையில் வெள்ளி 35 சதவீதம் பங்கு வகிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த மாற்றம் தென்னிந்தியாவில் எதிரொலிக்குமா அல்லது வட இந்தியாவிலேயே நின்றுவிடுமா..? வெள்ளிக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது என்பதை ஆகஸ்ட் மாத இறக்குமதி தரவுகள் மூலம் பார்க்க முடிகிறது. வெள்ளி இறக்குமதி ஆகஸ்ட் மாதம் 1 பில்லியன் டாலரைத் தொட்டு உள்ளது, இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 127 சதவீதம் அதிகமாகும்.

Share This Article

English summary

Silver Might Outshines Gold This Festive Season: Why Buyers Are Switching to Silver Jewellery Ahead of Navratri

Silver Might Outshines Gold This Festive Season: Why Buyers Are Switching to Silver Jewellery Ahead of Navratri — வெள்ளி வந்த பொற்காலம்.. ஓரம்கட்டப்பட்டும் தங்கம்.. மக்களே இதுதான் சரியான வாய்ப்பு!

Story first published: Sunday, September 27, 2026, 15:45 [IST]

Other articles published on Sep 27, 2026

Read More

Previous Post

பழமையான சிற்பங்கள் கண்டெடுப்பு : தமிழாசிரியர் செல்வராஜுவுக்கு பிரதமர் மோடி பாராட்டு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிராக யாழில் வெடிக்கவுள்ள போராட்டம்!

Next Post
திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிராக யாழில் வெடிக்கவுள்ள போராட்டம்!

திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிராக யாழில் வெடிக்கவுள்ள போராட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin