யாழ்ப்பாணம் – நல்லூரில் வைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் திருவுருவச்சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்று (27) மாலை 4.30 மணிக்கு நல்லூர் பகுதியில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதியம் நல்லூரில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
இங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில், தியாக தீபம் திலீபனின் உருவச்சிலை காவல்துறையினரால் அகற்றப்பட்டமையை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்று மாலை இந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ள நிலையில் அனைத்து உறவுகளும் கலந்துகொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.” என தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

