Last Updated:
மணப்பாறை தமிழாசிரியர் செல்வராஜுவின் களப்பணியைப் பிரதமர் மோடி பாராட்டினார். பழமையான சிற்பங்களையும், கோயில்களையும் கண்டறிந்த அவரது முயற்சிக்கு மோடி பாராட்டு தெரிவித்தார்.
பழமையான சிற்பங்களையும், கோயில்களையும் கண்டறிந்துள்ள திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த தமிழாசிரியர் செல்வராஜுவின் களப்பணியைப் பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
’மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியின் 138ஆவது பதிப்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், நமது பழங்கால வரலாற்றுடனான தொடர்பு இன்றும் உயிர்ப்புடன் இருப்பதற்கு வரலாற்று ஆர்வலர்களின் அர்ப்பணிப்பே காரணம் என்று கூறினார்.
தமிழ்நாட்டின் மணப்பாறையில் தமிழ்த்துறை பேராசிரியராக இருக்கும் செல்வராஜு, மாணவர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் களப்பயணம் மேற்கொண்டு பழமையான சிற்பங்களையும் கோயில்களையும் கண்டறிந்துள்ளதாகவும், நமது பாரம்பரியத்தையும் பழங்கால வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் வகையிலான பேராசிரியரின் இந்த முயற்சி சுவாரஸ்யமானது என்றும் தெரிவித்தார்.


