• Login
Wednesday, October 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வீட்டுக்கடன் வாங்கியவர்கள் கட்ட வேண்டிய புதிய இஎம்ஐ எவ்வளவு? – முழு விவரம்! | What the new EMIs will look like for existing home loan borrowers? check full details

GenevaTimes by GenevaTimes
October 7, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
வீட்டுக்கடன் வாங்கியவர்கள் கட்ட வேண்டிய புதிய இஎம்ஐ எவ்வளவு? – முழு விவரம்! | What the new EMIs will look like for existing home loan borrowers? check full details
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Business

oi-Velmurugan P

Time
Published: Wednesday, October 7, 2026, 11:03 [IST]

சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது ரெப்போ விகிதத்தை (Repo Rate) 0.25% (25 அடிப்படை புள்ளிகள்) உயர்த்தி 5.50% ஆக அறிவித்துள்ளது. அதாவது, வர்த்தக வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

இதன் காரணமாக வீட்டுக்கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் மற்றும் நுகர்வோர் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயரக்கூடும். கடன் வாங்கியவர்களுக்கு இது சற்று கசப்பான செய்தியாக இருந்தாலும், வங்கிகளில் தொகையைச் சேமித்து வைத்துள்ளவர்களுக்குச் சேமிப்புக்கான வட்டி விகிதம் உயரும் என்பதால், இது ஒரு நல்ல செய்தியாகும்.

What the new EMIs will look like for existing home loan borrowers check full details

ரெப்போ ரேட் உயர்வின் பின்னணி:

கடந்த ஒரு மாதமாகவே பங்குச் சந்தை எதிர்பார்த்ததற்கு ஏற்ப, ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு (MPC), ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் கூட்டாக முடிவெடுத்து ரெப்போ விகிதத்தை 5.25%-லிருந்து 5.50% ஆக உயர்த்தியுள்ளது. பிப்ரவரி 2023-க்குப் பிறகு மேற்கொள்ளப்படும் முதல் வட்டி உயர்வு இதுவாகும்.

அதிகரித்து வரும் பணவீக்கம், உயர்ந்த கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்புச் சரிவு ஆகிய சூழல்களைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

'வெற்றிப் பயணம்' திட்டம் குறித்த குழப்பம்.. கோவை அரசு பேருந்து நடத்துநர் தந்த விளக்கம்!

‘வெற்றிப் பயணம்’ திட்டம் குறித்த குழப்பம்.. கோவை அரசு பேருந்து நடத்துநர் தந்த விளக்கம்!

கடன் தவணை (EMI) எவ்வாறு மாறும்?

ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் (Floating Interest Rate) கடன் வாங்கியவர்கள் இனி கூடுதல் தொகையை மாதத் தவணையாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

எடுத்துக்காட்டுக் கணக்கீடு (வீட்டுக்கடன்):

கடன் தொகை: ₹36.48 லட்சம்

பழைய வட்டி (8.00%): மாத EMI = ₹30,513 (தோராயமாக ₹30,559)

புதிய வட்டி (8.25%): மாத EMI = ₹31,079

கூடுதல் சுமை: மாதம் ₹566 அதிகமாகச் செலுத்த வேண்டும்.

(குறிப்பு: இது ஒரு தோராயமான கணக்கீடு மட்டுமே; துல்லியமான தொகையை உங்கள் வங்கி நிர்வாகம் அறிவிக்கும்).

வெற்றிப்பயணம் திட்டத்தால் வியாபாரிகளுக்கு பெரிய சிக்கல்.. உள்ளுர் சந்தை முடங்கலாம்.. நெட்டிசன் பதிவு

வெற்றிப்பயணம் திட்டத்தால் வியாபாரிகளுக்கு பெரிய சிக்கல்.. உள்ளுர் சந்தை முடங்கலாம்.. நெட்டிசன் பதிவு

கடன் வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டிய முக்கியமான நடவடிக்கை:

வட்டி விகிதம் உயர்ந்தவுடன், நீங்கள் உடனடியாக உங்கள் வங்கிக் கிளையை அணுகி அல்லது இணையதளம் வழியாகத் தொடர்பு கொண்டு, “எனது மாத EMI தொகையை உயர்த்திக் கொள்கிறேன்” என்று முறைப்படி கடிதம் அல்லது மின்னஞ்சல் (Email) சமர்ப்பிக்க வேண்டும்.

அப்படி நீங்கள் எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை என்றால், வங்கி நிர்வாகம் உங்களின் மாத EMI தொகையை மாற்றாமல், கடன் செலுத்தும் காலத்தை (Tenure) கூடுதலாக 4 மாதங்கள் வரை நீட்டித்துவிடும். மாதந்தோறும் இந்தச் சிறிய கூடுதல் தொகையைக் கட்டி வந்தால், திட்டமிட்ட ஆண்டிலேயே உங்கள் கடன் முழுமையாக முடிவடையும்.

தனிநபர் & வாகனக் கடன்கள்

வங்கிகள் வழக்கமாக தனிநபர் கடன்களுக்கு 11% முதல் 13% வரை வட்டி வசூலிக்கின்றன. ஏற்கனவே நிலையான வட்டி விகிதத்தில் (Fixed Rate) கடன் வாங்கியவர்களுக்குப் பாதிப்பில்லை; ஆனால் இனி புதிதாகக் கடன் வாங்குபவர்களுக்கு வட்டி விகிதம் அதிகமாகும். வாகனக் கடன்கள் மற்றும் தவணை முறையில் (EMI) பொருட்கள் வாங்குவதற்கான நுகர்வோர் கடன்களின் வட்டியும் உயரும்.

சேமிப்பாளர்களுக்கான நற்செய்தி

அதேவேளையில், வங்கிகளில் வைக்கப்படும் நிலையான வைப்புத் தொகைகளுக்கான (Fixed Deposit) வட்டியும் 0.25% வரை உயரும். மேலும் வருங்கால வைப்பு நிதி (PF), செல்வமகள் சேமிப்புத் திட்டம், பொன்மகன் சேமிப்புத் திட்டம் மற்றும் அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி வருவாயும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

English summary

The hike in the repo rate is driving up interest rates for home, vehicle, personal, and consumer loans, while also increasing interest rates on savings. Here are the full details regarding the extent of the increase and what the new EMIs will look like for existing home loan borrowers.

Read More

Previous Post

ரூ.15 இலட்சம் பெறுமதியான சங்குகளை விற்பனை செய்ய முயன்ற நபர் கைது – Sri Lanka Tamil News

Next Post

வீட்டு கடன், வாகன கடன் வாங்கியவர்கள் அதிர்ச்சி.. ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி..!! | RBI Hikes Repo Rate to 5.50%: Home & Car Loan EMIs Set to Rise After First Rate Hike Since 2023

Next Post
வீட்டு கடன், வாகன கடன் வாங்கியவர்கள் அதிர்ச்சி.. ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி..!! | RBI Hikes Repo Rate to 5.50%: Home & Car Loan EMIs Set to Rise After First Rate Hike Since 2023

வீட்டு கடன், வாகன கடன் வாங்கியவர்கள் அதிர்ச்சி.. ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி..!! | RBI Hikes Repo Rate to 5.50%: Home & Car Loan EMIs Set to Rise After First Rate Hike Since 2023

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin