Last Updated:
மைசூரு தசரா விழாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்ரோன்களைப் பயன்படுத்தி வானில் உருவாக்கப்பட்ட பிரமாண்ட மயில் உருவம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
கர்நாடக மாநிலம், மைசூருவில் நடைபெற்ற தசரா விழாவில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் வானில் பிரமாண்ட மயில் உருவாக்கப்பட்டு, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மைசூரு தசரா விழாவின் ஒரு பகுதியாக, அங்குள்ள பன்னிமண்ட மைதானத்தில் பிரமாண்ட ட்ரோன் காட்சி நடைபெற்றது. 3 ஆயிரத்து 473 ட்ரோன்களைப் பயன்படுத்தி வானில் மயில் உருவம் உருவாக்கப்பட்டது. இது ட்ரோன்கள் மூலம் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பறவை வடிவம் என்ற பிரிவில் புதிய கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளது
மேலும், மைசூருவின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில், வண்ணத்துப்பூச்சி, சிவதாண்டவம், கர்நாடக மாநிலத்தின் வரைபடம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள் வண்ண விளக்குகளால் வானில் ஒளிர்ந்தன.
இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், பாரம்பரியமும் நவீனத் தொழில்நுட்பமும் இணைந்திருப்பது கர்நாடகாவின் முன்னேற்றத்தைப் பிரதிபலிப்பதாகப் பாராட்டியுள்ளார்.


