ஜோதிடத்தில் மிக மங்களகரமான குரு பகவானும், தளபதியான செவ்வாயும் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்ம ராசியில் ஒன்றிணைகின்றனர்.
குரு பகவான் அக்டோபர் 31 அன்றும் செவ்வாய் பகவான் நவம்பர் 12 அன்றும் சிம்ம ராசிக்குள் நுழைவதால் அங்கு சக்திவாய்ந்த குரு மங்கள யோகம் உருவாகிறது.
தைரியம், செல்வம் மற்றும் தொழில் வளர்ச்சியைத் தரும் இந்த அரிய யோகத்தால் அனைத்து ராசிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டாலும் குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு பேரதிர்ஷ்டமும் அமோக யோகமும் கிடைக்கவுள்ளது.
அவ்வாறு குரு மங்கள யோகத்தால் ராஜயோகம் பெறப்போகும் அந்த 3 ராசிகள் எவை என்று இந்த பதிவில் காண்போம்.
| சிம்மம் |
- சிம்ம ராசியின் முதல் வீட்டில் குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் குரு மங்கள யோகம் உருவாகிறது.
- இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.
- ராஜவாழ்க்கையை வாழ்வார்கள்.
- எதிர்பாராத பண வரவு கிடைக்கும்.
- நீண்ட காலமாக கைக்கு வராமல் இருந்த பணம் இந்த யோக காலத்தில் கைக்கு கிடைக்கும்.
- தைரியமும் வீரமும் அதிகரிக்கும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகளைக் காண்பீர்கள்.
- வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன.
- முதலீடுகளுக்கு இக்காலம் மிகவும் உகந்ததாக இருக்கும்.
|
| கும்பம் |
- கும்ப ராசியின் ஏழாவது வீட்டில் குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் குரு மங்கள யோகம் உருவாகிறது.
- இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.
- வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் எதிர்பார்த்த வேலை தேடி வரும்.
- தொழில் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள்.
- குறிப்பாக வியாபாரம் மற்றும் வணிகத்தில் நல்ல லாபத்தை ஈட்டுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- மொத்தத்தில் குருவும் மற்றும் செவ்வாயும் நல்ல நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புக்களை அளிப்பார்கள்.
- இதன் மூலம் நிதி நிலைமை மேம்படும்.
|
| மேஷம்
|
- மேஷ ராசியின் ஐந்தாவது வீட்டில் குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் குரு மங்கள யோகம் உருவாகிறது.
- இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும்.
- நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புக்களும் உள்ளன.
- வரும் ஆண்டுகளில் உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காண்பீர்கள்.
- நீங்கள் நிதி ரீதியாக நல்ல பலனைப் பெறுவீர்கள்.
- முக்கியமாக புதிய நட்புகள் கிடைக்கும்.
- இந்த நட்புகளால் எதிர்காலத்தில் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவீர்கள்.
|
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!
|
Read More