கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடைபெறுவதையொட்டி வீரர்களுக்கான மெகா ஏலம் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது.
சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் வரும் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் நடைபெற உள்ள இந்த ஏலத்தில் பங்கேற்பதற்கு உலகம் முழுவதும் இருந்தும் 1574 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இவர்களில் பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் நிர்வாக கமிட்டி மொத்தம் 574 வீரர்களை தேர்வு செய்துள்ளது.
இவர்களில் 366 பேர் இந்தியாவையும் மற்ற 208 பேர் வெளிநாடுகளையும் சேர்ந்தவர்கள். இந்த மெகா எலத்தின் போது ஒட்டுமொத்தமாக 204 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் 70 வீரர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
ஒவ்வொரு முறை நடைபெறும் மெகா ஏலத்தின் போது அதிகமான தொகை வீரர்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. இவற்றில் அதிகபட்சமாக 2022 ஆம் ஆண்டு நடந்த மெகா ஏலத்தின் போது 551 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 2015 ஆம் ஆண்டு 87 கோடியே 60 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து – நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரை செலவிடப்பட்டுள்ள தொகை பின்வருமாறு-
2014 – ரூ. 262.6 கோடி
2015 – ரூ. 87.6 கோடி
2016 – ரூ. 136 கோடி
2017 – ரூ. 91 கோடி
2018 – ரூ. 431 கோடி
2019 – ரூ. 106.8 கோடி
2020 – ரூ. 140.3 கோடி
2021 – ரூ. 145.3 கோடி
2022 – ரூ. 551.7 கோடி
2023 – ரூ. 167 கோடி
2024 – ரூ. 230.45 கோடி
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)