ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த 13-த் தேதி முடிவடைந்தது. மீதம் இருந்த 38 தொகுதிகளுக்கு இன்று (20-ம் தேதி) வாக்குப் பதிவு நடைபெற்றது. ஜார்க்கண்ட் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. ஜார்க்கண்ட் மாநிலத்தில், காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியாகவும், பாஜக எதிரணியாகவும் தேர்தலை சந்தித்துள்ளன.
ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பும் முக்கிய இடங்களை வகிக்கும். கடந்த சில தேர்தல்களாக தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அவ்வளவு துல்லியமாக இல்லாமலும், சில சமயங்களில் கருத்துக் கணிப்புக்கு மாறான முடிவுகளும் வெளியாகிவருகிறது. இருந்தாலும், மக்களுக்கு கருத்துக் கணிப்பு மீதான ஆவல் இருந்துக்கொண்டே இருக்கும்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன இதில் ஆட்சியை பிடிக்க 41 தொகுதிகள் தேவை.
Peoples Pulse கருத்துக்கணிப்பின் படி பாஜக கூட்டணி 44 முதல் 53 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 25 முதல் 37 இடங்களையும், மற்றவை 5 முதல் 9 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
CNN News18 வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, பாஜக கூட்டணி 45 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 33 இடங்களையும், மற்றவை 3 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.
JVC வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, பாஜக கூட்டணி 42 முதல் 44 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 40 முதல் 30 தொகுதிகளிலும், மற்றவை 1 தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)