• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மிஸ் ஃபீல்ட் முதல் பவர் ப்ளே தவறு வரை… தோல்விக்கான காரணங்களை அடுக்கிய ருதுராஜ் கெய்க்வாட்!

GenevaTimes by GenevaTimes
March 31, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
மிஸ் ஃபீல்ட் முதல் பவர் ப்ளே தவறு வரை… தோல்விக்கான காரணங்களை அடுக்கிய ருதுராஜ் கெய்க்வாட்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 31, 2025 8:15 AM IST

ருதுராஜ் கெய்க்வாட் ராஜஸ்தான் அணிக்கு எதிரான தோல்வியின் காரணங்களை விளக்கினார். பவர் ப்ளே பௌலிங், மிஸ் ஃபீல்டு மற்றும் ஓப்பனிங் மொமண்டம் குறைவாக இருந்தது முக்கிய காரணங்கள்.

News18News18
News18

ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததற்கான காரணங்களை சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விளக்கியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது. இதன்மூலம் ஐபிஎல் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற ஐபிஎல்லின் 11 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்டது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தானை முதலில் பேட்டிங் ஆட அழைத்தது.

அதன்படி களம் இறங்கிய ராஜஸ்தான் வீரர்கள், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தானில் அதிரடியாக விளையாடிய நிதிஷ் ராணா, 5 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 83 ரன்களை குவித்து அசத்தினார். 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறி கொடுத்து தடுமாறியது.

கேப்டன் ருதுராஜ் பொறுப்புடன் விளையாடி 63 ரன்கள் சேர்த்தார். இருப்பினும் மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்களை சேர்க்க முடியாமல் திணறினர். இதனால், 20 ஓவர் முடிவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் தரப்பில், 4 ஓவர்களை வீசிய ஹசரங்கா, 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

இதன்பின் பேசிய சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தோல்விக்கான காரணங்கள் குறித்து பேசினார். அதில், “பௌலிங்கில் பவர் ப்ளேயில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். அந்த தருணத்தில் தான் போட்டியை நாங்கள் விட்டுவிட்டோம். நிதிஷ் ராணா ஸ்கொயருக்கு பின்னால்தான் அடிக்கிறார் என்பது தெரிந்தும், அவரை ஷாட்களை மாற்றி ஆட வைக்க தவறிவிட்டோம்.

Also Read | தமிழ்நாடு பாஜகவிற்கு விரைவில் புதிய தலைவர்.. அண்ணாமலை மாற்றமா? – தமிழிசை சொன்ன தகவல்!

அதேபோல், மிஸ் ஃபீல்டு. பீல்டிங்கில் செய்த தவறுகளால் 8-10 ரன்களை அதிகம் கொடுத்துவிட்டோம். இந்த ஆடுகளத்தில் 180 என்பது சேஸ் செய்யக்கூடிய ஸ்கோர். இதனால் சேஸ் செய்துவிடலாம் என்று மகிழ்ச்சியுடன் இருந்தேன். ரஹானே நம்பர் 3 இடத்தில் இறங்கி சென்னை அணிக்காக சிறப்பாக ஆடியிருக்கிறார். அம்பதி ராயுடுவும் சிறப்பாக இந்த வேலையை செய்துள்ளார்.

அவர்களின் பொறுப்பை நான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நம்பர் 3ல் இறங்கி விளையாடி வருகிறேன். ஆனால், 3 போட்டிகளாக முதல் 2 ஓவர்களுக்குள் நான் விளையாட வந்துவிடுகிறேன். ஓப்பனிங்கில் எங்களுக்கு சரியான மொமண்டம் கிடைக்கவில்லை. ஓப்பனிங் சரியாகும்பட்சத்தில் சிறந்த அணியாக மாறுவோம்” என்று ருதுராஜ் கெய்க்வாட் தோல்விக்கான காரணங்கள் பேசினார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

March 31, 2025 8:15 AM IST

Read More

Previous Post

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை இன்று கோலகல கொண்டாட்டம்… வண்ண விளக்குகளால் ஒளிரும் மசூதிகள்

Next Post

“டீலுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லையென்றால் குண்டு மழை பொழிவோம்” – ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்

Next Post
“டீலுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லையென்றால் குண்டு மழை பொழிவோம்” – ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்

``டீலுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லையென்றால் குண்டு மழை பொழிவோம்'' - ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin