கோலாலம்பூர்:
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக, மலேசியாவில் மானியமில்லா RON97 (புதிய விலை RM4.20 ) மற்றும் RON95 (புதிய விலை RM3.60 ) பெட்ரோல் விலைகள் லிட்டருக்கு 20 சென்னும், மானியமில்லா டீசல் விலை லிட்டருக்கு 35 சென்னும் உயர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி மானியமில்லா RON97 பெட்ரோல், லிட்டருக்கு 20 காசுகள் உயர்ந்து RM4.20 ஆகவும், RON95 லிட்டருக்கு 20 காசுகள் உயர்ந்து RM3.62 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மானியமில்லா டீசல்: லிட்டருக்கு 35 காசுகள் உயர்ந்து RM4.42 ஆக அதிகரித்துள்ளது.
இந்த புதிய விலை மாற்றம் ஜூலை 23 முதல் ஜூலை 29 வரை அமலில் இருக்கும் என நிதி அமைச்சு (MOF) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
The post மானியமில்லா பெட்ரோல் 20 சென்னும், டீசல் 35 சென்னும் உயர்வு! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

