நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் 2026 உலக மாஸ்டர்ஸ் ஹாக்கி உலகக் கிண்ணத் தொடரின் வர்ணஜாலம் மிக்க திறப்பு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தந்துள்ள வீரர்களின் உற்சாகத்தையும் விளையாட்டு ஆர்வத்தையும் வெளிப்படுத்தும் விதமாக இந்நிகழ்வு மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உலகெங்கிலும் உள்ள மூத்த ஹாக்கி வீரர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கும் இத்தொடர் தற்போது கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ளது.

