Last Updated:
அமெரிக்கர்கள் ஈரானுடான போரை விரும்பவில்லை என செய்திகள் வரும் நிலையில், அமெரிக்கர்கள் தனக்கு ஆதரவு தருவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா ஈரான் இடையே மீண்டும் போர் தொடங்கியுள்ள சூழலில், ஈராக்கில் உள்ள ராணுவ தளத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்க வீரர் ஒருவர் ஸ்வின்டன் உயிரிழந்தார். இதேபோல ஜோர்டானில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் உள்ள டோவர் விமானப்படை தளத்துக்கு கொண்டு வரப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் டிரம்ப், வீரர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றார். மேலும், ஹோர்மூஸ் நீரிணையில் செல்லும் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டில் உள்ள பாலம் அல்லது மின் நிலையம் தகர்க்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். அதேநேரத்தில் அமெரிக்கர்கள் ஈரானுடான போரை விரும்பவில்லை என செய்திகள் வரும் நிலையில், அமெரிக்கர்கள் தனக்கு ஆதரவு தருவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
Jul 23, 2026 11:03 AM IST


