• Login
Monday, September 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மருத்துவ உலகின் மாபெரும் அதிசயம்… 271 நாட்கள் பன்றி சிறுநீரகத்துடன் வாழ்ந்து சாதனை படைத்த நபர்! எப்படி? | Pig Kidney | Transplantation | Lifestyle News (வாழ்க்கை முறை செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 21, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
மருத்துவ உலகின் மாபெரும் அதிசயம்… 271 நாட்கள் பன்றி சிறுநீரகத்துடன் வாழ்ந்து சாதனை படைத்த நபர்! எப்படி? | Pig Kidney | Transplantation | Lifestyle News (வாழ்க்கை முறை செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 21, 2026 12:19 PM IST

பன்றியின் சிறுநீரகத்தைப் பயன்படுத்தி, டயாலிசிஸ் இல்லாமல் நீண்டகாலம் உயிர்வாழ்ந்த நபர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஆண்ட்ரூஸ்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

இறுதிக்கட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 66 வயதான ஒருவர், மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பயன்படுத்தி, டயாலிசிஸ் சிகிச்சை இன்றி 271 நாட்கள் வாழ்ந்து சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமல்ல… 271 நாட்கள் கழித்து, தற்போது வெற்றிகரமாக மனித உறுப்பை பெற்றுவிட்டார் அவர். மனித உறுப்பு கிடைக்கும் வரை, தற்காலிகமாகவே அவர் இந்த பன்றி உறுப்பை பெற்றிருந்திருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ‘உறுப்பு செயலிழப்பு காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, மனித உறுப்பு தானமாக கிடைக்கும் வரையில் விலங்குகளின் உறுப்புகளைப் பயன்படுத்தலாம்’ என்பதை, ஆண்ட்ரூஸின் இந்த சிகிச்சை உணர்த்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தி லான்செட் இதழில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி, உயிருள்ள ஒரு நோயாளியின் ‘மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை’க்கு ஒரு விலங்கின் உறுப்பு பயன்படுத்தப்பட்டு, அது நீண்டகாலம் வெற்றியும் அடைந்துள்ளது இதுவே முதன்முறை. மருத்துவ உலகம் கண்டுள்ள இந்த வெற்றியானது, உலகெங்கிலும் உடல் உறுப்பு தானத்திற்காக காத்திருப்போர் பட்டியலில் சிக்கித் தவிக்கும் மில்லியன் கணக்கான மக்களுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

எங்கு நடந்தது இச்சம்பவம்? எப்படி செய்யப்பட்டது இந்த சிகிச்சை? விரிவான விவரம் இங்கே..

அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரைச் சேர்ந்த டிம் ஆண்ட்ரூஸ் என்ற 66 வயது நபர்தான் இந்த சிகிச்சையை பெற்றவர். இவரின் உடலில் உள்ள பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தில் மேற்கொண்டு வைரஸ் தாக்கம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், இவரின் நோயெதிர்ப்பு மண்டல நிராகரிப்பை தடுக்கவும்தான் மருத்துவர்கள் இந்த சிகிச்சையை செய்துள்ளனர்.

இந்த சிகிச்சையின்கீழ் 69 குறிப்பிட்ட மரபணு மாற்றங்களுடன் வடிவமைக்கப்பட்ட, ‘யுகடான் மினியேச்சர்’ பன்றியிடமிருந்து உறுப்பு பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட அந்த உறுப்பை, ஆண்ட்ரூஸின் உடலில் வைத்து நிபுணர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். சிகிச்சைக்குப் பிறகு, அந்த அயல் உறுப்பு உடனடியாகச் செயல்படத் தொடங்கிவிட்டது. அதன்பின்னர் சுமார் 9 மாதங்களுக்கு ஆண்ட்ரூஸ் டயாலிசிஸ் தேவையின்றி, சமைத்தல், நடத்தல் மற்றும் வீட்டு வேலைகள் போன்ற அன்றாட நடவடிக்கைகளை செய்ய தொடங்கியிருக்கிறார்.

இதுபற்றி அவர் பேட்டியளிக்கையில், “கடந்த சில வருடங்களில், நான் உயிரோடு இருந்தால்கூட என்னால் அதை உணர முடிந்ததில்லை. ஆனால் இப்போது அப்படியல்ல. ஒவ்வொரு நாளும் காலை கண்விழிக்கையில், ‘இன்னும் ஒரு நாள் நம்மால் வாழமுடியும்’ என்று நான் உணரும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஓராண்டுக்கு முன்பே இறந்திருக்க வேண்டிய நான், இன்று ஆரோக்கியமாக இருப்பது இந்த மருத்துவத்தால்தான்” என்றுள்ளார்.

ஏன் 271 நாட்கள்தான் பன்றி சிறுநீரகத்தோடு ஆண்ட்ரூஸ் இருந்தார்? எதை வைத்து இந்த கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டது?

சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, பன்றியின் சிறுநீரகத்தில் நுண் ரத்த நாள சேதமும் அழற்சியும் ஏற்பட்டு, அதன் செயல்பாடு படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இதையடுத்து மருத்துவர்கள் ஆண்ட்ரூஸை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 271 நாட்களுக்குப் பிறகு பன்றியின் சிறுநீரகம் அகற்றப்பட்டது. பின்னர் 82 நாட்கள் டயாலிசிஸ் சிகிச்சை பெற்ற ஆண்ட்ரூஸுக்கு, 2026 ஜனவரியில் இறந்த ஒருவரின் தான சிறுநீரகம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. அந்த மனித சிறுநீரகம் தற்போது நன்றாக செயல்பட்டு வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் செய்யப்பட்ட ரத்தப் பரிசோதனையானது இந்த 9 மாத கால இடைவெளி என்பது ‘பன்றியின் சிறுநீரகம், எதிர்கால மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையைச் சிக்கலாக்கும் ஆன்டிபாடிகளைத் தூண்டவில்லை. எந்த விலங்கு வைரஸ்களும் ஆண்ட்ரூஸின் உடலில் பரவவில்லை’ என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளன.

இதன்மூலம் பன்றியின் சிறுநீரகத்தைப் பயன்படுத்தி, டயாலிசிஸ் இல்லாமல் நீண்டகாலம் உயிர்வாழ்ந்த நபர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஆண்ட்ரூஸ். எனினும், நோயெதிர்ப்பு தடுப்பு முறைகளை மேம்படுத்தவும், இதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்யவும் மேலும் மருத்துவ ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

Read More

Previous Post

சீரற்ற காலநிலை: நாடளாவிய ரீதியில் 38 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை – Sri Lanka Tamil News

Next Post

தெமெர்லோவில் கேபிள் திருட்டு கும்பல்கள் அதிரடி வேட்டை: பெண் உட்பட 7 பேர் கைது; RM50,000 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்! | Makkal Osai

Next Post
தெமெர்லோவில் கேபிள் திருட்டு கும்பல்கள் அதிரடி வேட்டை: பெண் உட்பட 7 பேர் கைது; RM50,000 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்! | Makkal Osai

தெமெர்லோவில் கேபிள் திருட்டு கும்பல்கள் அதிரடி வேட்டை: பெண் உட்பட 7 பேர் கைது; RM50,000 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin