• Login
Monday, September 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தெமெர்லோவில் கேபிள் திருட்டு கும்பல்கள் அதிரடி வேட்டை: பெண் உட்பட 7 பேர் கைது; RM50,000 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 21, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
தெமெர்லோவில் கேபிள் திருட்டு கும்பல்கள் அதிரடி வேட்டை: பெண் உட்பட 7 பேர் கைது; RM50,000 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

பகாங், தெமெர்லோவில் TNB மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் (TM) கேபிள்களைத் திருடி வந்த மூன்று வெவ்வேறு குற்றக் கும்பல்களைச் சேர்ந்த 7 பேரைப் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 15 முதல் 19-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட தொடர் சோதனைகளில் 16 முதல் 40 வயதிற்குட்பட்ட 6 ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டதாகத் தெமர்லோ மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமட் நசிம் பஹரோன் தெரிவித்தார்.

இன்று (செப்டம்பர் 21) தெமர்லோ மாவட்டக் காவல் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கைதானவர்களிடமிருந்து கேபிள்கள், வாகனங்கள் மற்றும் கேபிள் வெட்டும் கருவிகள் உட்பட RM50,000 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

“கைது செய்யப்பட்டவர்களில் நால்வருக்கு ஏற்கனவே குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் உள்ளன. சிறுநீர் பரிசோதனையில் நால்வருக்கு ‘மெத்தாம்பேட்டமைன்’ போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் நடைபெற்ற இத்திருட்டுச் சம்பவங்களின் பின்னணியில் மூன்று முக்கியக் கும்பல்கள் இயங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது:

மேலும் இந்த நடவடிக்கையில் ‘கேங் மாட் லெட்ரிக்’ என்ற கும்பலைச் சேர்ந்த இருவர், ‘கேங் மிஸ்டா’ கும்பலை சேர்ந்த ஒருவர்மற்றும் ‘கேங் சசி’ கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள ‘கேங் மிஸ்டா’ மற்றும் ‘கேங் சசி’ கும்பல்களைச் சேர்ந்த மேலும் 6 ஆண்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர் என்றும் கூறினார்.

திருடப்பட்ட கேபிள்கள் கிலோவுக்கு RM30 என்ற விலையில் பழைய இரும்புக்கடைகளில் விற்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இச்செயல் வெறும் திருட்டு மட்டுமன்றி, நாட்டின் உள்கட்டமைப்பைச் சீர்குலைத்து பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

“மலேசியர்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் இதுபோன்ற குற்றவாளிகளை நாங்கள் ஒருபோதும் சகிக்க மாட்டோம். உங்களைத் தேடிக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்” என்றார் அவர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள 7 பேரும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 117-இன் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்துக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 379, 431A மற்றும் 1998-ஆம் ஆண்டு தொடர்பாடல், பன்முறைமைச் சட்டத்தின் பிரிவு 235(2) ஆகியவற்றின் கீழ் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



Read More

Previous Post

மருத்துவ உலகின் மாபெரும் அதிசயம்… 271 நாட்கள் பன்றி சிறுநீரகத்துடன் வாழ்ந்து சாதனை படைத்த நபர்! எப்படி? | Pig Kidney | Transplantation | Lifestyle News (வாழ்க்கை முறை செய்திகள்)

Next Post

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜரான முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச – Sri Lanka Tamil News

Next Post
பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜரான முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச – Sri Lanka Tamil News

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜரான முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin