
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மாகாணத்தின் 35 பாடசாலைகள் உட்பட நாடளாவிய ரீதியில் 38 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள 38 பாடசாலைகளுக்கு இன்று (21) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலவும் பாதகமான வானிலை சூழலில் பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் அந்தந்த பிராந்திய கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று காலை 9.00 மணி நிலவரப்படி, மத்திய மாகாணத்தில் உள்ள 35 பாடசாலைகள் மற்றும் சப்ரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களில் தலா ஒரு பாடசாலை உட்பட மொத்தம் 38 பாடசாலைகள் இன்று மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

