Last Updated:
இந்தியாவில் மூத்த பத்திரிகையாளராக அறியப்பட்ட பாயல் மேத்தாவின் மறைவுக்கு பிரதமர் உள்பட ஏராளமான அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி செலுத்தியுள்ளனர்.
இந்தியாவில் மூத்த பத்திரிகையாளராக அறியப்பட்ட பாயல் மேத்தாவின் மறைவுக்கு பிரதமர் உள்பட ஏராளமான அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி செலுத்தியுள்ளனர்.
CNN-News18 தொலைக்காட்சியின் மூத்த அரசியல் நிருபராகப் பணியாற்றி, தனது 46-வது வயதில் காலமான பாயல் மேத்தாவின் நினைவாக, அவரது மேலாளரும், CNN News 18 தொலைக்காட்சியின் தேசிய விவகாரங்கள் துறை தலைவருமான அமன் சர்மா கூறியிருப்பதாவது-
அர்ப்பணிப்புமிக்கப் பணி: பாயல் மேத்தா தொலைக்காட்சி ஊடகத்துறையில் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் அர்ப்பணிப்புள்ள நிருபராக அறியப்பட்டவர். நாடாளுமன்றத்தின் காலைத் தொடக்கம் முதல் இரவு அது மூடப்படும் வரை களத்திலேயே இருந்து செய்திகளைச் சேகரிப்பவர். 8 AM நேரலை முதல் நள்ளிரவு நேரலை வரை எந்த நேரத்திலும் செய்தி சேகரிக்கத் தயாராக இருந்தார்.
கடந்த மாதம் தனது தந்தையை இழந்த பாயல், அந்தத் துயரத்திலிருந்து மீண்டு மீண்டும் தனது பணியில் முழு வீச்சில் ஈடுபட்டார். கடந்த வாரம் பிரதமர் மோடியின் பிறந்தநாள் தொடர்பான செய்திச் சேகரிப்பிற்காக குஜராத்தின் வட்நகர் சென்று நேரலை வழங்கித் திரும்பியிருந்தார்.
தனது குடும்பத்தினருடன் மும்பைக்கு விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்காகச் சென்றிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20, 2026) அதிகாலை அவர் திடீரென உயிரிழந்தார். செப்டம்பர் 22 அன்று தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாட இருந்த நிலையில் அவரது இந்த மறைவு நிகழ்ந்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, வாரணாசியில் கடுமையான வெப்பம் காரணமாக மயக்கமடைந்த அவருக்கு, பின்னர் சிறிய அளவிலான பக்கவாதம் (Mini-stroke) ஏற்பட்டது. உடல்நலக்குறைவு இருந்தபோதிலும், பிரதமரின் பேட்டி, முக்கியமான தேர்தல் கள ஆய்வுகள் மற்றும் அசாசுதீன் ஒவைசியின் நள்ளிரவுப் பேட்டி எனத் தொடர்ச்சியாகச் சாதனைப் பேட்டிகளை எடுத்து வந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட நாட்டின் முதன்மை அரசியல் தலைவர்கள் அனைவரும் அவரது மறைவுக்குத் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
செய்தித் துறையில் “பெரிய விஷயங்களைச் சாதிக்கப் பிறந்தவர்” என்று தன்னை நிரூபித்துக் காட்டிய பாயல் மேத்தாவின் மறைவு, ஊடகத்துறைக்கும் அவரது குடும்பத்திற்கும் ஈடுசெய்ய முடியாத மிகப்பெரிய இழப்பாகும். என்று தெரிவித்துள்ளார்.


