• Login
Wednesday, November 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பிளஸ் 2 மாணவன் கொடூர கொலை.. எதிர்பாரா திருப்பமாக சிறுமி கைது… | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 4, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
பிளஸ் 2 மாணவன் கொடூர கொலை.. எதிர்பாரா திருப்பமாக சிறுமி கைது… | Makkal Osai
Share on FacebookShare on Twitter


திருவனந்தபுரத்தில், தனது வீட்டிலிருந்து காணாமல் போன 17 வயது பள்ளி மாணவன், ஒரு சாக்கினுள் திணிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. 

பிளஸ்-2 மாணவன்
கேரளம் மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் அடுத்த பாங்கப்பாறையை சேர்ந்தவர் மது. இவரது மனைவி தர்மஜா. இவர்களது மகன் அபிராம் (வயது 17). பிளஸ்-2 படித்து வந்த இவர், கடந்த 1-ந் தேதி விடுமுறை தினத்தில் வீட்டில் இருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதனை தொடர்ந்து நண்பனுடன் வெளியே சென்று வருவதாக அபிராம் வீட்டில் கூறிச் சென்றார். அதன் பிறகு மாலையில் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனை அழைத்த போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

செல்போன் சிக்னல்
இதனால் அதிர்ச்சியான அவரது பெற்றோர் பல்வேறு இடங்களிலும் மகனை தேடினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து ஸ்ரீகாரியம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் பல்வேறு இடங்களில் விசாரித்தும் பலன் இல்லை. எனவே சைபர் கிரைம் போலீசாரின் உதவியை போலீசார் நாடினர். அவர்கள் அபிராமின் செல்போன் சிக்னலை கண்டறிந்து, அதன் மூலம் துப்பு துலக்கினர்.

இதில் பாங்கப்பாறையில் உள்ள ஒரு அடர்ந்த பகுதியில் செல்போன் சிக்னல் காட்டியது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது புதர் மண்டிய பகுதியில் ஒரு சாக்குப்பை கிடந்துள்ளது. அதனை எடுத்து பார்த்த போது அதில் அபிராம் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக இருந்தது தெரியவந்தது.

இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மகன் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

இன்ஸ்டாகிராமில் பழக்கம்
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அபிராம் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனை செய்தது யார்? என போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில் 17 வயது சிறுமி உள்பட 3 பேருக்கு தொடர்பு இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர். அவர்களை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.

கொலை செய்யப்பட்ட அபிராம், 17 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழகியுள்ளார். இது அந்த சிறுமியை காதலித்தவருக்கு பிடிக்கவில்லை. இதனை தொடர்ந்து அவர் அபிராமை கண்டித்தாராம். இருப்பினும் பழக்கம் நீடித்ததால் ஆத்திரம் அடைந்த அவர். சம்பவத்தன்று சிறுமி மூலம், அபிராமை செல்போனில் அழைத்து குறிப்பிட்ட இடத்திற்கு வரும்படி கூறியுள்ளார்.

சிறுமி உள்பட 3 பேர்
இதனை நம்பி அவர் சென்றதும், சிறுமியின் காதலன் மற்றும் ஒருவர் சேர்ந்து வாக்குவாதம் செய்துள்ளனர். இது முற்றியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள், அபிராமை கீழே தள்ளி, அவரது கழுத்தில் மிதித்துள்ளனர். இதனால் கழுத்து நெரிபட்டு அவர் இறந்ததும், சாக்கு மூடையில் கட்டி வீசிச் சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து சிறுமி உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர், அவர்களிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விசாரணை
இதற்கிடையில் அபிராமின் நண்பர் ஒருவருக்கே, கொலைக்கும்பல் குறி வைத்ததாகவும், தவறுதலாக இதில் அபிராம் மாட்டிக் கொண்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அபிராமின் தாய் மற்றும் சகோதரி அரபு நாட்டில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது



Read More

Previous Post

ஓடியாங்க.. ஓடியாங்க..! அமெரிக்க அரசை விட அதிக வட்டி வருமானம் தரும் Microsoft Bond..! | Higher Than US Treasuries: Microsoft Launches Massive $25B Bond Sale to Fund AI Infrastructure Expansion

Next Post

எதிர்கட்சியின் செயற்பாட்டால் நாடாளுமன்றை விட்டு வெளியேறிய பாடசாலை மாணவர்கள்

Next Post
எதிர்கட்சியின் செயற்பாட்டால் நாடாளுமன்றை விட்டு வெளியேறிய பாடசாலை மாணவர்கள்

எதிர்கட்சியின் செயற்பாட்டால் நாடாளுமன்றை விட்டு வெளியேறிய பாடசாலை மாணவர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin