பிரித்தானியாவில் பதின்ம வயதினருக்கு இரவு நேர சமூக ஊடகப் பயன்பாட்டுக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அந்தவகையில், 16 மற்றும் 17 வயதுடைய இளைஞர்களுக்கான இரவு நேர சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டமொன்றைக் கொண்டு வரத் தீர்மானித்துள்ளது.
இந்த புதிய திட்டத்தின் கீழ், இரவு நேரத்திலிருந்து அதிகாலை 6 மணி வரை இந்த வயதுப் பிரிவினரின் சமூக ஊடகப் பயன்பாடு கட்டுப்படுத்தப்படவுள்ளது.
மனநலனைப் பாதுகாத்தல்
சிறுவர்களின் மனநலனைப் பாதுகாத்தல், இணைய அடிமைத்தனத்தைக் குறைத்தல் மற்றும் சமூக ஊடகங்களின் பாதகமான தாக்கங்களைக் கட்டுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காகவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், விமர்சகர்கள் இந்த முன்மொழிவுகளை “குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில், இந்த முன்மொழிவுகள் முழுமையான அணுகுமுறை இல்லாதவை என்றும், “தவறவிடப்பட்ட வாய்ப்பு” என்றும் வர்ணித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த மாதம் பிரித்தானியா16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்காக Snapchat, TikTok, YouTube, Instagram மற்றும் Facebook போன்ற சமூக ஊடகத் தளங்களின் பயன்பாட்டைத் தடை செய்ய முடிவெடுத்திருந்தது.
அந்த சட்டங்கள் 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

