• Login
Sunday, May 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிரதமர் மோடியுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பு.. இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் 5 முக்கிய அறிவிப்புகள் வெளியாகின | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 24, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பிரதமர் மோடியுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பு.. இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் 5 முக்கிய அறிவிப்புகள் வெளியாகின | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, சிஎன்என்-நியூஸ்18 (CNN-News18) ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், இந்தியா-அமெரிக்கா உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் 5 முக்கிய அறிவிப்புகளை மார்கோ ரூபியோ வெளியிட்டார். பிரதமர் மோடியின் தலைமையையும், சர்வதேச அரங்கில் இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கையும் அவர் வெகுவாகப் பாராட்டினார். அவற்றின் விபரம் பின்வருமாறு-

ரஷ்யாவுக்கு மாற்றாக இந்தியாவின் எரிசக்தித் தேவைக்கு அமெரிக்கா ஆதரவு – இந்தியா தற்போது தனது கச்சா எண்ணெய் தேவையின் பெரும்பகுதியை ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அமெரிக்கா முன்னிலை வகிக்க விரும்புவதாக ரூபியோ தெரிவித்தார்.

ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் விநியோகத் தடைகள் மற்றும் எண்ணெய் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, இந்தியாவுக்குப் புதிய விநியோகப் பாதைகளைத் திறக்க அமெரிக்கா தயாராக உள்ளது. இந்தியாவின் எரிசக்தி ஆதாரங்களைப் பன்முகப்படுத்த வெனிசுலா போன்ற நாடுகளின் மாற்றுப் பாதைகளையும் முன்னிறுத்தப் போவதாக அவர் தனது முதல் அறிவிப்பில் உறுதியளித்தார்.

சர்வதேச எரிபொருள் விலை உயர்வுக்கு ஈரானே காரணம் – உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி (CNG) விலை உயர்வால் சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சுமைக்கு ஈரானின் தன்னிச்சையான போக்கே காரணம் என்று ரூபியோ நேரடியாகக் குற்றம் சாட்டினார்.

ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் சட்டவிரோதமான மற்றும் குற்றவியல் ரீதியாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பதே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொடுவதற்கு முக்கியக் காரணம் என்று அவர் சாடினார்.

வணிகக் கப்பல்களுக்கு மிரட்டல்; இந்தியா-அமெரிக்கா ஒரே நிலைப்பாடு – ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் தங்களுக்கு வரி செலுத்தவில்லை என்றாலோ, அல்லது தங்களது கோரிக்கைகளுக்குப் பணியவில்லை என்றாலோ அவற்றை மூழ்கடித்து விடுவோம் என ஈரான் பகிரங்கமாக மிரட்டி வருவதாக ரூபியோ குறிப்பிட்டார்.

இது சர்வதேச சட்டங்களை முற்றிலும் மீறும் செயலாகும். எனவே, ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகவும் திறந்தவெளியாகவும் வைத்திருப்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒரே மாதிரியான மூலோபாயக் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளன என்றார்.

அணு ஆயுத அச்சுறுத்தலும் ரகசிய அமைதிப் பேச்சுவார்த்தையும் – ஈரானுடன் நடந்து வரும் ரகசிய அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்த முக்கியத் தகவலை அவர் பகிர்ந்து கொண்டார். ஈரானின் ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பும் சிதறிப்போய், தீவிரவாத மதகுருமார்களால் நடத்தப்படுவதால் அவர்களுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவது எளிதல்ல என்று குறிப்பிட்ட அவர், எனினும் அமெரிக்கா அமைதியான தீர்வையே விரும்புவதாகக் கூறினார்.

ஈரானின் அணுஆயுதத் திட்டமே மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும், தற்போது அமெரிக்கப் பிரதிநிதிகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்து இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்று வருவதாகவும் தெரிவித்தார்.

“இனி இந்தியாவிலேயே ஆயுதங்களைத் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனங்கள்” – பாதுகாப்புத்துறையில் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்ட ரூபியோ, அமெரிக்கப் பாதுகாப்பு மற்றும் ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்கள் இனி இந்தியாவிலேயே நேரடியாகத் தங்களது உற்பத்தியைத் தொடங்க தீவிர ஆர்வம் காட்டி வருவதாகக் கூறினார்.

இந்தியாவின் திறமையான மனிதவளத்தையும் அதன் அபரிமிதமான ஆற்றலையும் பாராட்டிய அவர், உலக நாடுகள் தங்களது பாதுகாப்புத் தளங்களை வலுப்படுத்தி வரும் வேளையில், இந்த உலகளாவிய முயற்சியில் இந்தியா அமெரிக்காவின் முதன்மையான கூட்டாளிகளாக திகழும் என்றார்.

Read More

Previous Post

அதிகரிக்கும் இணையதள நிதி மோசடிகள்…! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post

அமெரிக்கா: வெள்ளை மாளிகை அருகே மீண்டும் துப்பாக்கிச்சூடு… அலறிய மக்கள்! | World News (உலக செய்திகள்)

Next Post
அமெரிக்கா: வெள்ளை மாளிகை அருகே மீண்டும் துப்பாக்கிச்சூடு… அலறிய மக்கள்! | World News (உலக செய்திகள்)

அமெரிக்கா: வெள்ளை மாளிகை அருகே மீண்டும் துப்பாக்கிச்சூடு... அலறிய மக்கள்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin