Last Updated:
ரகசிய படையினர் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கொல்லப்பட்டார்.
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகைக்கு வெளியே ரகசியப் படையினர் மற்றும் தேசிய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த நபர் திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனால், அப்பகுதியில் சாலையில் சென்ற மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
I was in the middle of taping on my iPhone for a social video from the White House North Lawn when we heard the shots. It sounded like dozens of gunshots. We were told to sprint to the press briefing room where we are holding now. pic.twitter.com/iqdQwh4soq
— Selina Wang (@selinawangtv) May 23, 2026
வெள்ளை மாளிகை அருகே நின்று தொலைக்காட்சியில் நேரலையில் பேசிக் கொண்டிருந்த பெண் நிருபர், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு மேசைக்கு அடியில் பதுங்கி உயிர் தப்பினார். உடனடியாக ரகசியப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கொல்லப்பட்டார். அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்த போது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து அதிபர் டிரம்பிடம் அதிகாரிகள் விளக்கமளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


