Last Updated:
முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான நெட்ஃபிளிக்ஸ் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பயனர்களின் தரவுகளை அனுமதியின்றி சேகரித்து, நெட்ஃபிளிக்ஸை குழந்தைகள் நீண்ட நேரம் செலவிடும் வகையில் வடிவமைத்ததாக அந்நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தின் அரசு தலைமை வழக்கறிஞர் தொடர்ந்த இவ்வழக்கில், பல ஆண்டுகளாக பயனர்களின் விருப்பங்கள் மற்றும் பார்வை பழக்கங்களை கண்காணித்து, அந்த தரவுகளை விளம்பர நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய்க்கு விற்று லாபம் ஈட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், ஒரு திரைப்படம் முடிந்தவுடன் தானாகவே, அடுத்த நிகழ்ச்சியை இயக்கும் “ஆட்டோ ப்ளே” போன்ற அம்சங்கள் மூலம், பயனர்களை தொடர்ந்து பார்க்க வைக்கும் “டார்க் பேட்டர்ன்ஸ்” பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
நெட்ஃபிளிக்ஸில் படம் பார்க்கும் பயனர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய வழக்கறிஞர், சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட தரவுகளை நீக்கவும், பயனர்களின் ஒப்புதல் இன்றி விளம்பர நிறுவனங்களுக்கு அதனை பகிர்வதை தடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு விதிமீறலுக்கும் 10 ஆயிரம் டாலர் வரை, அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10 லட்சம் அபராதம் விதிக்கவும் உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.


