Last Updated:
ரசிகர்கள் www.chennaisuperkings.com, சிஎஸ்கே மொபைல் ஆப் அல்லது www.district.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ள டாட்டா ஐபிஎல் 2026 தொடரின் 7-வது லீக் போட்டியில், மே 18 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான அதிகாரப்பூர்வ டிக்கெட் விற்பனை குறித்த விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 14 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று மதியம் 12:15 மணிக்கு தொடங்குகிறது. அனைத்து டிக்கெட்டுகளும் பிரத்யேகமாக ஆன்லைன் மூலமாக மட்டுமே விற்பனை செய்யப்படும்.
ரசிகர்கள் www.chennaisuperkings.com, சிஎஸ்கே மொபைல் ஆப் அல்லது www.district.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
C / D / E லோயர் (Lower): ரூ. 2,000
C / D / E அப்பர் (Upper): ரூ. 4,000
I / J / K அப்பர் (Upper): ரூ. 3,500
I / J / K லோயர் (Lower): ரூ. 4,700
KMK டெரஸ் (Terrace): ரூ. 8,000
சிஎஸ்கே ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட ‘WSTL’ சந்தாதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பொது விற்பனை தொடங்குவதற்கு முன்பே இவர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் ‘ஏர்லி அக்சஸ்’ (Early Access) வசதியைப் பெறலாம். இதற்கு சிஎஸ்கே செயலியை பதிவிறக்கம் செய்து உறுப்பினராக வேண்டியது அவசியம்.
போட்டி அன்று மைதானத்தின் நுழைவு வாயில்கள் மாலை 5:00 மணிக்கே (போட்டி தொடங்குவதற்கு இரண்டரை மணி நேரம் முன்னதாக) திறக்கப்படும். ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால், கவுண்டர் விற்பனை இருக்காது என்பதை ரசிகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். டிக்கெட் விலையில் பொழுதுபோக்கு வரி மற்றும் ஜிஎஸ்டி (GST) இணைக்கப்பட்டுள்ளது. மே 18 அன்று மாலை 7:30 மணிக்கு போட்டி தொடங்கும்.


