• Login
Wednesday, June 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

படுதோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா: மிரளவிட்ட வங்கதேச பௌலர்கள் – ஸ்கோர் விபரம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
June 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
படுதோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா: மிரளவிட்ட வங்கதேச பௌலர்கள் – ஸ்கோர் விபரம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
படுதோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா: மிரளவிட்ட வங்கதேச பௌலர்கள் – ஸ்கோர் விபரம்

டாக்காவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், வங்கதேச அணி ஆஸ்திரேலியாவை 86 ரன்கள் வித்தியாசத்தில் (டிஎல்எஸ் முறையில்) வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 284/8 ரன்களை எடுத்தது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும் ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. டாக்காவில் நடைபெற்ற முதல் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய வங்கதேச அணியில், தொடக்க வீரர்கள் டன்ஜித் ஹசன் தமிம் (54 ரன்கள், 44 பந்துகள்) மற்றும் நஜ்முல் ஹோசைன் ஷான்டோ (67 ரன்கள், 86 பந்துகள்) சேர்ந்து 91 பந்துகளில் 96 ரன்கள் குவித்து அஸ்திவாரம் அமைத்தனர்.

பின்னர், மொசடெக் ஹோசைன் 70 பந்துகளில் 86 ரன்களும், டவுகித் ஹ்ரிதோய் 51 பந்துகளில் 31 ரன்களும், இறுதியில் டஸ்கின் அகமது 16 பந்துகளில் 20 ரன்களும் சேர்த்து, வங்கதேசம் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 284 ரன்களைப் பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் நேதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளும், லியான் ஸ்காட் மற்றும் மேட் ரென்ஷா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

284 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலியா, முதல் பந்திலேயே ஓபனர் மேத்யூ ஷார்ட் (0) அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். மார்னஸ் லபுஷேன் (1), ஜோஷ் இங்கிலிஸ் (19) விரைவில் வெளியேற, கூப்பர் கானலி (35) மற்றும் அலெக்ஸ் கேரி (47) சிறிது தாக்குப்பிடித்தனர். கேமரூன் கிரீன் 66 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஒரு முனையில் நிலைத்திருந்தார்.

ஆனால் மற்ற வீரர்கள் – மேத்யூ ரென்ஷா (2), லியான் ஸ்காட் (2), சேவியர் பார்ட்லெட் (1), நேதன் எல்லிஸ் (8) – அடுத்தடுத்து வெளியேறினர். ஆஸ்திரேலியா 42.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. ஆட்டம் தொடரவியலாத நிலையில், டிஎல்எஸ் முறைப்படி வங்கதேசம் 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் நஹித் ராணா 10 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளும், முஸ்தபிசுர் ரஹ்மான் 5.2 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளும், மொசடெக் ஹோசைன் 10 ஓவர்களில் 37 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர். இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, ஜூன் 11ஆம் தேதி, அதே டாக்கா மைதானத்தில் காலை 10:30 மணிக்கு தொடங்குகிறது.

Read More

Previous Post

Trump warns Iran | “ஈரானுக்கு பதிலடி கொடுக்கப்படும்” – டிரம்ப் எச்சரிக்கை! | World News (உலக செய்திகள்)

Next Post

தெலங்கானாவில் தலைமை பொறியாளர் வீட்டில் ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்.! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
தெலங்கானாவில் தலைமை பொறியாளர் வீட்டில் ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்.! | India News (இந்தியா செய்திகள்)

தெலங்கானாவில் தலைமை பொறியாளர் வீட்டில் ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்.! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin