Last Updated:
கைபற்றப்பட்ட ஆவணங்கள், சொத்துக்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் கூறினார்.
தெலங்கானாவில் தலைமை பொறியாளர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சாலைகள் மற்றும் கட்டடங்கள் துறை தலைமை பொறியாளரான மோகன் நாயக் என்பவர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் ஊழல் தடுப்புத்துறையினர் சோதனை நடத்தினர். தெலங்கானா முழுவதும் 11 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மாதாபூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வருமானத்தை தாண்டி வாங்கியதாக தங்கம், வைரம், ரொக்க பணம் என 100 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இவர் அரசு ஒப்பந்தங்களை குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு கொடுத்து அதற்காக லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மோகன் நாயக் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்புத்துறையினர் தெரிவித்தனர்.
கைபற்றப்பட்ட ஆவணங்கள், சொத்துக்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் கூறினார்.


