• Login
Tuesday, September 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பசிபிக் கடலில் ஒரே நேரத்தில் 5 புயல்கள்.. அந்த மூணு மட்டும் ஏன் இவ்வளவு வேகம்? பீதியை தரும் போலோ | Pacific Ocean 5 Storms.. Why Are These Three Intensifying So Fast? Polo Storm Raises Concern

GenevaTimes by GenevaTimes
September 29, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பசிபிக் கடலில் ஒரே நேரத்தில் 5 புயல்கள்.. அந்த மூணு மட்டும் ஏன் இவ்வளவு வேகம்? பீதியை தரும் போலோ | Pacific Ocean 5 Storms.. Why Are These Three Intensifying So Fast? Polo Storm Raises Concern
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Hema Vandhana

Time
Published: Tuesday, September 29, 2026, 11:15 [IST]

கடலில் ஒரு புயல் உருவானாலே கரையோர மக்களுக்கு பீதியும், கலக்கமும் ஏற்பட்டுவிடும்.. ஆனால் இப்போது பசிபிக் கடலில் ஒரே நேரத்தில் 5 புயல்கள் உருவாகியிருக்கிறதாம்.. இதில் 3 புயல்கள் அதிதீவிரமாக மாறியுள்ளன.. உண்மையிலேயே கடலில் என்ன நடக்கிறது? எங்கே, எப்போது? ஏன்? இந்த புயல்கள் தீவிரமாகின்றன? என்பதையெல்லாம் இங்கே சுருக்கமாக பார்க்கலாம்..!!!

புயல் என்றாலே பலத்த காற்று, கனமழை, கடல் சீற்றம், வெள்ளம் என பாதிப்புகள் ஏற்படும்… குறிப்பாக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் இதன் தாக்கம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அந்த வகையில், ஒரே நேரத்தில் இத்தனை புயல்கள் உருவாகியிருப்பது இப்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Pacific Storms Weather Update Storm Alert

பசிபிக், அட்லாண்டிக் – 5 புயல்கள்

பசிபிக் கடல் பகுதியில் போலோ, சுரிக்கே, நோலோ, ஒடாலிஸ், ரேச்சல் என 5 புயல்கள் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளன. இதில் போலோ, சுரிக்கே, நோலோ ஆகிய 3 புயல்கள் மிகவும் வலுவான புயல்களாக மாறியுள்ளன. ஒடாலிஸ் மற்றும் ரேச்சல் ஆகியவை நடுத்தர வலிமையுடன் உள்ளன. இதுதவிர, பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடல் பகுதிகளில் மேலும் 3 குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதிகளும் உருவாகியுள்ளன.

அட்லாண்டிக் பகுதியில் ஃபே புயலும் உருவாகியுள்ளது. இதனால் பசிபிக், அட்லாண்டிக் என 2 கடல் பகுதிகளிலும் உருவாகியுள்ள புயல்களின் நகர்வை வானிலை ஆய்வு மையங்கள் தொடர்ந்து கவனித்து வருகின்றன.

மணிக்கு சுமார் 285 கிமீ வேகம்

இதில் போலோ புயல், கிழக்கு பசிபிக் பகுதியில் உருவாகி மெக்சிகோ கடற்கரை பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது.. இந்தப் புயலால் கனமழை, பலத்த காற்று, கடல் சீற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது. மெக்சிகோவின் குரேரோ, மிச்சோகான் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். இதனால் சில இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த போலோ புயல், உருவான கொஞ்ச நேரத்திலேயே வேகமாக வலுப்பெற்றது… ஒரு கட்டத்தில் இது மிகவும் சக்திவாய்ந்த 5ம் வகை புயலாகவும் மாறியது.

புயலுக்குள் சென்று ஆய்வு செய்த வானிலை ஆய்வு விமானத்தில், மணிக்கு சுமார் 285 கி.மீ. வேகத்தில் காற்று பதிவானதாக கூறப்படுகிறது. இருந்தாலும் போலோ புயல் மெக்சிகோவை நேரடியாகத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. ஆனால் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நோலோ புயல் நகர்ந்து வருகிறது

அதேபோல மத்திய பசிபிக் பகுதியில் உருவான நோலோ புயல் ஹவாய் தீவுகளை நோக்கி நகர்ந்து வருகிறது. மேற்கு பசிபிக் பகுதியில் உருவான சுரிக்கே புயலும் வேகமாக வலுப்பெற்று தைவானை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் மெக்சிகோ மட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் ஜப்பானின் ஓகினாவா உள்ளிட்ட பகுதிகளிலும் புயல்களின் நகர்வை வானிலை ஆய்வு மையங்கள் கண்காணித்தபடியே உள்ளன

ஒரே நேரத்தில் இத்தனை புயல்களா?

ஒரே நேரத்தில் இப்படி பல புயல்கள் உருவாவது புதிது கிடையாது.. ஆனால் ஒரே நேரத்தில் 3 மிகவும் வலுவான புயல்கள் உருவாவதுதான், அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு 2015ம் ஆண்டு மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பகுதிகளில் ஒரே நேரத்தில் 3 மிகவும் வலுவான புயல்கள் உருவாகியிருந்தன.

இப்போது ஒரே நேரத்தில் இத்தனை புயல்கள் உருவாக கடல் நீரின் வெப்பநிலையும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது… பொதுவாக கடல் மேற்பரப்பின் வெப்பநிலை சுமார் 26.5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் இருந்தால், புயல் உருவாக தேவையான வெப்பமும் ஈரப்பதமும் கிடைக்கும். கடல் நீர் அதிகமாக சூடாக இருக்கும்போது, உருவாகும் புயல்கள் வேகமாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளது.

கடல் நீர் வெப்பமடைதல்

அந்தவகையில், இப்போது இதுதொடர்பாக வெளியாகியுள்ள ஒரு தகவல் கவனத்தை ஈர்த்துள்ளது… அதாவது, மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பகுதியில் ஒரு குறிப்பிட்ட கடல் பகுதியில் பதிவான வெப்பநிலை, வழக்கத்தைவிட 3.05 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்துள்ளது. 2015ம் ஆண்டு வலுவான எல் நினோ காலத்தில் பதிவான 3.02 டிகிரி செல்சியஸ் என்ற அளவையும் இது கடந்துள்ளது.

எல் நினோ மற்றும் உலக வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர் வழக்கத்தைவிட அதிகமாக வெப்பமடைவதால், ஒரே நேரத்தில் பல புயல்கள் உருவாக சாதகமான சூழல் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் விளக்கம் தருகிறார்கள்.. அதேபோல், சாதாரண காற்றழுத்த தாழ்வு பகுதிகள்கூட குறுகிய காலத்தில் வேகமாக வலுப்பெற்று புயல்களாக மாறும் நிகழ்வுகளும் சமீபத்திய ஆண்டுகளில் கவனிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் தற்போது உருவாகியுள்ள புயல்கள் எங்கே நகர்கின்றன, அவற்றின் வலிமை எப்படி மாறுகிறது, எந்தப் பகுதிகளை நெருங்குகின்றன என்பதையெல்லாம் கண்காணிப்பதில் வானிலை ஆய்வு மையங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி கொண்டிருக்கின்றன..

ஒரே நேரத்தில் இத்தனை புயல்கள் உருவாகியிருப்பதற்கு பின்னால் கடலின் வெப்பநிலையும் முக்கிய காரணமாக இருப்பதுதான், இப்போது உலக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது….!!!

English summary

Pacific Ocean 5 Storms.. Why Are These Three Intensifying So Fast? Polo Storm Raises Concern

Read More

Previous Post

சற்றுமுன் நீதிமன்றில் நாமல் முன்னிலை – ஐபிசி தமிழ்

Next Post

7 மாத போருக்கு முடிவு காலம் பிறக்குது? பேச்சுவார்த்தைக்கு வந்த அமெரிக்கா – ஈரான்..! | End to 7-Month Conflict? US and Iran Begin Backchannel Ceasefire Talks Amid Strait of Hormuz Crisis

Next Post
7 மாத போருக்கு முடிவு காலம் பிறக்குது? பேச்சுவார்த்தைக்கு வந்த அமெரிக்கா – ஈரான்..! | End to 7-Month Conflict? US and Iran Begin Backchannel Ceasefire Talks Amid Strait of Hormuz Crisis

7 மாத போருக்கு முடிவு காலம் பிறக்குது? பேச்சுவார்த்தைக்கு வந்த அமெரிக்கா - ஈரான்..! | End to 7-Month Conflict? US and Iran Begin Backchannel Ceasefire Talks Amid Strait of Hormuz Crisis

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin