• Login
Tuesday, September 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

7 மாத போருக்கு முடிவு காலம் பிறக்குது? பேச்சுவார்த்தைக்கு வந்த அமெரிக்கா – ஈரான்..! | End to 7-Month Conflict? US and Iran Begin Backchannel Ceasefire Talks Amid Strait of Hormuz Crisis

GenevaTimes by GenevaTimes
September 29, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
7 மாத போருக்கு முடிவு காலம் பிறக்குது? பேச்சுவார்த்தைக்கு வந்த அமெரிக்கா – ஈரான்..! | End to 7-Month Conflict? US and Iran Begin Backchannel Ceasefire Talks Amid Strait of Hormuz Crisis
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


7 மாத போருக்கு முடிவு காலம் பிறக்குது? பேச்சுவார்த்தைக்கு வந்த அமெரிக்கா – ஈரான்..!

அமெரிக்கா – ஈரான் – இஸ்ரேல் மத்தியில் பிப்ரவரி மாதம் முதல் 7 மாதங்களாக தொடர்ந்து நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர புதிய முயற்சியாக திங்கட்கிழமை எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் கடந்த 3 நாட்களாக ஹார்முஸ் வழித்தடத்தில் அனுமயின்றி பயணிக்கும் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த போதிலும் அமெரிக்க பதில் தாக்குதல் நடத்தாமல் இருந்து வருகிறது.

இதேவேளையில் டிரம்ப் அரசு நவம்பர் மாதம் நடக்க இருக்கும் மிட் டேர்ம் தேர்தலில் அதிகப்படியான கவனம் செலுத்தி வரும் வேளையில் ஈரான் உடனான முழு அளவில் போர் டிரம்ப் ஆட்சிக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும்.

7 மாத போருக்கு முடிவு காலம் பிறக்குது? பேச்சுவார்த்தைக்கு வந்த அமெரிக்கா - ஈரான்..!

இந்த நிலையில் திங்கட்கிழமை அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் தங்களுடைய மத்தியஸ்தர் நாடுகளுடன் போர் நிறுத்தத்திற்காக தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இரு நாடுகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் அமெரிக்காவில் நடந்த ஐநா பொதுக்கூட்டம் நடந்த போது ஈரான் 7 நாள் போர் நிறுத்தத் திட்டத்தை முன்வைத்தது. தற்போது நடக்கும் பேச்சுவார்த்தை இந்த 7 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் திருத்தப்பட்ட வடிவத்தின் அடிப்படையில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா ஈரான் உடன் கடந்த 3 மாதத்தில் பல முறையில் பேச்சுவார்த்தைக்காக முயற்சிகளை மேற்கொண்டது, ஆனால் ஈரான் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் சமீபத்தில் ஹவுதி படைகள் சவுதி மீது தாக்குதலை அதிகரித்த பின்பும், பாம் அல் மண்டெப் வழித்தடத்தை கட்டுப்படுத்திய பின்பு ஈரான் பல்வேறு கண்டிஷன்களை முன்வைத்து பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளது.

மேலும் ஈரான் முன்வைத்த போர் நிறுத்த அமைதி ஒப்பந்த திட்டத்தில் ஈரான் மற்றும் லெபனானில் அமெரிக்கா – இஸ்ரேல் நாடுகள் அனைத்து போர் நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும், அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள ஈரான் நாட்டின் சொத்துகளை விடுவிப்பது, ஈரான் நாட்டின் எண்ணெய் மீதான வர்த்தக தடைகளை முழுமையாக நீக்குவது மற்றும் ஈரான் மீதான அமெரிக்க கடற்படை முடக்கத்தை முழுமையாக ஹார்முஸ்-ல் இருந்து நீக்குவது போன்ற கண்டிஷன்கள் உள்ளது.

இதை அனைத்தையும் செய்தால் ஹார்முஸ் வழியாக கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஈரான் திறக்கும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இதன் அடிப்படையில் தான் பேச்சுவார்த்தை துவங்க உள்ளது.

ஐநா பொது கூட்டத்தில் பங்கேற்ற பின்னரும் நியூயார்க்கில் தங்கியுள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் டிரம்ப் பேச்சுவார்த்தையின் முதல் கட்டமாக ஈரான் மீதான பொருளாதார தடையை நீக்கியும், முடக்கப்பட்ட ஈரான் நாட்டின் சொத்துக்களை டிரம்ப் விடுவித்துள்ளதாக வெளியான தகவல்களை முழுமையாக மறுத்துள்ளார் டிரம்ப். ஈரானுக்கு தான் எந்த சலுகையும் வழங்கவில்லை என்றும், தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் உண்மை இல்லை என்றும் Truth Social பதிவில் தெரிவித்துள்ளார் டிரம்ப்.

Share This Article

English summary

End to 7-Month Conflict? US and Iran Begin Backchannel Ceasefire Talks Amid Strait of Hormuz Crisis

End to 7-Month Conflict? US and Iran Begin Backchannel Ceasefire Talks Amid Strait of Hormuz Crisis — 7 மாத போருக்கு முடிவு காலம் பிறக்குது? பேச்சுவார்த்தைக்கு வந்த அமெரிக்கா – ஈரான்..!

Story first published: Tuesday, September 29, 2026, 11:24 [IST]

Other articles published on Sep 29, 2026

Read More

Previous Post

பசிபிக் கடலில் ஒரே நேரத்தில் 5 புயல்கள்.. அந்த மூணு மட்டும் ஏன் இவ்வளவு வேகம்? பீதியை தரும் போலோ | Pacific Ocean 5 Storms.. Why Are These Three Intensifying So Fast? Polo Storm Raises Concern

Next Post

சித்தி ஹம்சா  இறப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை – டாக்டர் மகாதீர் | Makkal Osai

Next Post
சித்தி ஹம்சா  இறப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை – டாக்டர் மகாதீர் | Makkal Osai

சித்தி ஹம்சா  இறப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை - டாக்டர் மகாதீர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin