மும்பை: பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கடந்த பிப்ரவரியில் பங்குச்சந்தையில் புதிதாக 11.3 லட்சம் பேர் இணைந்திருப்பதாக தேசிய பங்குச்சந்தைக் குறியீடு(என். எஸ். இ) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி முடிவு வரையிலான நிலவரப்படி, பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 11.2 கோடியாக உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

