Last Updated:
இந்த சீசனில் சென்னை, ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகளை தவிர்த்து மற்ற அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பாயிண்ட்ஸ் டேபிளில் கடைசி இடமான பத்தாவது இடத்துக்கு சென்றுள்ளது. லீக் சுற்றில் மீதம் 8 போட்டிகள் உள்ளன.
இதில் குறைந்தது 6 போட்டிகளில் ஆவது வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணியானது அடுத்த சுற்றான ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். போட்டி கடுமையாக இருந்தால், மீதமுள்ள 8 போட்டிகளிலும் சென்னை அணி வெல்ல வேண்டியது கட்டாயமாக ஆகிவிடும்.
சென்னை அணி கடைசியாக விளையாடிய ஆர்சிபி, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. சென்னை தனது முதல் போட்டியான மும்பை அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் சென்னை அணி 2 புள்ளிகள் மற்றும் – 1.554 நெட் ரன் ரேட்டுடன் பத்தாவது இடத்திற்கு சென்றுள்ளது.
இந்நிலையில் இன்று வலுவான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சென்னை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் சென்னை வெற்றி பெற்றால் அதே நேரத்தில் நெட் ரன் ரேட் அதிகமாக இருந்தால் 9 இடத்திற்கு முன்னேற வாய்ப்புகள் உள்ளன.
தரவரிசை பட்டியலை பொறுத்தளவில் குஜராத், டெல்லி, பெங்களூரு, லக்னோ ஆகிய 4 அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன. 5 முதல் 9 இடங்களில் கொல்கத்தா, பஞ்சாப், மும்பை, ராஜஸ்தான் மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகள் உள்ளன. இந்த சீசனில் சென்னை, ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகளை தவிர்த்து மற்ற அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் சென்னை அணி மிக கடுமையாக போராடினால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெற முடியும்.
ஒவ்வொரு அணியும் தலா 14 போட்டிகளில் விளையாடும் லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றில் விளையாடும்.
April 14, 2025 4:05 PM IST


