அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் ஆசனப் பட்டி அணிய வேண்டும் என்ற விதிமுறையிலிருந்து சில பிரிவினருக்கு விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
சிறு குழந்தைகள் மற்றும் நான்கரை அடிக்கும் குறைவான உயரம் உள்ள பயணிகளுக்கு ஆசனப் பட்டி விதி பொருந்தாது என அவர் குறிப்பிட்டார்.
மேலும், மருத்துவ காரணங்களால் ஆசனப் பட்டி அணிய வேண்டாம் என மருத்துவ ரீதியாக அறிவுறுத்தப்பட்டுள்ள பயணிகளுக்கும் இந்த விதியிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இத்தகைய சூழ்நிலைகளை பொலிஸ் அதிகாரிகள் கருத்திற்கொண்டு, சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு விதிவிலக்கை வழங்குவார்கள் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் கூறினார்.
எனினும், ஆசனப் பட்டி அணிய முடியாத குழந்தைகள் மற்றும் மருத்துவக் காரணங்களுக்காக ஆசனப் பட்டிஅணிய முடியாத பயணிகளை பாதுகாப்பான முறையில் வாகனங்களில் அழைத்துச் செல்வதை சாரதிகள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும், குறிப்பாக அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். (a)

