மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் இந்த நம்பிக்கைக்கும், அரசாங்கத்தின் 158 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமை குறித்தும் நாளை தெரிந்துக்கொள்ள முடியும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சிகள் உள்ளிட்ட சில அமைப்புகளால் பல்வேறு கருத்துக்கள் அரசாங்கத்தின் ஒற்றுமை தொடர்பில் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களின் ஒற்றுமை நாளை வெளிப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் இன்று (24) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தனிப்பட்ட நலன்களை அடிப்படையாகக் கொண்டல்லாமல், பொதுவான இலக்கை நோக்கியே அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நாளை மாலை 7 மணியளவில் இந்த நாடாளுமன்றத்தின் நிலைமை என்ன என்பதை எங்களால் காண முடியும்.
அரசாங்கத்தின் 158 உறுப்பினர்களின் ஒற்றுமை எவ்வாறு உள்ளது என்பதும் நாளை வெளிப்படும்.
158 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பரவி வருகிறது.
எனினும் அவர்களுக்கிடையிலான ஒற்றுமை சிறிதளவும் பாதிக்கப்படவில்லை.
நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மாற்றத்திற்கு இந்தக் கூட்டு ஒற்றுமை எவ்வாறு பங்களிக்கிறது என்பது நாளை மாலை தெளிவாகும்.
இதனிடையே, இலங்கை ஒரு சிறந்த நாடாக மாறும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.“ என பிரதமர் மேலும் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

