• Login
Thursday, September 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மொத்த ஆசியாவையும் அலறவிட்ட வடகொரியா.. ஜப்பானில் மிரட்டலான சாதனை! | North Korea Dominates Weightlifting at Asian Games as Ri Song Gum Breaks Multiple World Records

GenevaTimes by GenevaTimes
September 24, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மொத்த ஆசியாவையும் அலறவிட்ட வடகொரியா.. ஜப்பானில் மிரட்டலான சாதனை! | North Korea Dominates Weightlifting at Asian Games as Ri Song Gum Breaks Multiple World Records
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Halley Karthik

Time
Updated: Wednesday, September 23, 2026, 15:54 [IST]

டோக்கியோ: ஜப்பானில் நடைபெற்று வந்த ஆசிய விளையாட்டு போட்டியில், வடகொரிய வீராங்கனை தங்கப்பதக்கம் பெற்றிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. சோத்துக்கே வழியில்லை.. கெடுபிடியான நாடு, ராணுவ ஆட்சி.. இப்படியெல்லாம் பேசப்பட்ட நாடுதான் தங்கம் பெற்று அசத்தியிருக்கிறது.

வடகொரியா என்று சொன்னவுடன் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, சைட் கிராப் வெட்டப்பட்ட குட்டை மனிதரான கிம் ஜாங் உன்-தான். அதெல்லாம் ஒரு நாடே கிடையாது.. அங்கெல்லாம் மக்கள் எப்படிதான் வாழுறாங்களோ! என்று மொத்த உலகமும் பேசி வருகிறது. ஆனால் அங்கிருந்துதான் உலக சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

North Korea

ஜப்பானின் ஐச்சி-நகாயா பகுதியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்த சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. இப்போட்டியில் வடகொரியாவின் ‘ரி சாங் கம்’ எனும் பெண்மணி 215 கிலோ எடையை தூக்கி, 3 புதிய உலக சாதனைகளை படைத்திருக்கிறார்.

முதல் சாதனை ஸ்னாட்ச் பிரிவில் நடந்திருக்கிறது. பார்பெல்லை ஒரே மூச்சில் தலைக்கு மேல் தூக்கும் இந்த முறையில், அவர் 94 கிலோ எடையை தூக்கினார். இது இதற்கு முந்தைய உலக சாதனையான 93 கிலோவை விட 1 கிலோ அதிகமாகும்.

இரண்டாவது சாதனை கிளீன் அண்ட் ஜெர்க்கில் நடத்தப்பட்டிருக்கிறது. பால்பெல்லை முதலில் நெஞ்சுப் பகுதிக்கு கொண்டு வந்து பின்னர் தலைக்கு மேல் தூக்கும் இந்த முறையில், அவர் தனது சொந்த சாதனையை இரண்டு முறை முறியடித்தார். முதலில் 116 கிலோ, பின்னர் 121 கிலோ எடையை தூக்கி புதிய உலக சாதனையை படைத்தார்.

3வது சாதனை மொத்த எடை பிரிவில் நடத்தப்பட்டிருக்கிறது. ஸ்னாட்ச் 94 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க்ட் ஆகிய இரண்டையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 215 கிலோ எடையை தூக்கி அசத்தினார். இது முந்தைய உலக சாதனை ஒட்டுமொத்த எடையை விட 7 கிலோ அதிகமாகும். இப்படியாக பலு தூக்கும் போட்டியில் அவர் 3 உலக சாதனைகளை படைத்திருக்கிறார்.

நம்முடைய பார்வையில் வடகொரியா மொக்கை நாடாக தெரியலாம். ஆனால், பளுதுக்குதல் மற்றும் குத்துச்சண்டை போன்றவற்றில் வடகொரியா உலக அளவில் மிரட்டலான நாடாகும். சர்வதேச அளவில் பதக்கம் வெல்லும் விளையாட்டு வீரர்களுக்கு, அந்நாட்டின் மிக உயரிய ‘மக்களின் தடகள வீரர்’ என்கிற விருது வழங்கும் பழக்கம் வடகொரியாவில் இருக்கிறது. இந்த விருது பெற்றால் வாழ்க்கை நிலைமை அப்படியே தலைக்கீழாக மாறிவிடும். எனவே, அந்நாட்டு விளையாட்டு வீரர்கள், கடுமையான ராணுவ கட்டுப்பாட்டுடன் கூடிய பயிற்சிகளை பெறுகின்றனர்.

இந்த பயிற்சிதான் ஆசிய போட்டியில் வடகொரிய வீரர் தங்கம் ஜெயிக்க காரணம். அதுவும் ஜப்பான் மண்ணில் தங்கம் வென்றிருப்பது சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஏனெனில் ஜப்பானுக்கும்-வடகொரியாவுக்கும் ஏழைரை சனி.

இந்த போட்டியில் 198 கிலோ எடையை தூக்கி இந்திய வீரர் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பளுதூக்குதிலில் இந்தியாவுக்கு இருந்த 28 ஆண்டுகால பதக்க ஏக்கம் முடிவுக்கு வந்திருக்கிறது. கடைசியாக இந்த போட்டியில் கடந்த 1998ம் ஆண்டு கர்ணம் மல்லேஸ்வரி வெள்ளி பதக்கம் வென்றார். அதன் பின்னர், மீராபாய் சானுதான் தற்போது பதக்கம் வென்றிருக்கிறார்.

English summary

North Korea: A North Korean female athlete winning a gold medal at the Asian Games has garnered international attention. This is a country often characterized by severe hardship—where even basic food is scarce—as well as strict controls and military rule; yet, it has achieved a stunning gold-medal victory.

Read More

Previous Post

நாளை மாலை 7 மணிக்கு வரவுள்ள முடிவு! எதிர்கட்சிகளின் கேள்விக்கு ஹரிணி பதில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin