• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தென்மேற்கு பருவமழை தீவிரம்: கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், மும்பை, கர்நாடகாவிலும் கனமழை | Southwest monsoon begins Schools and colleges closed in Kerala Red alert for Karnataka floods in Mumbai

GenevaTimes by GenevaTimes
May 26, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
தென்மேற்கு பருவமழை தீவிரம்: கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், மும்பை, கர்நாடகாவிலும் கனமழை | Southwest monsoon begins Schools and colleges closed in Kerala Red alert for Karnataka floods in Mumbai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: தென்மேற்கு பருவமழை நேற்று (மே 25, 2025) தொடங்கியதால் மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரள மாநிலங்களில் கனமழை பொழிந்து வருகிறது. கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (மே.26) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அங்கு 11 மாவடங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், கர்நாடகாவிலும் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று (மே 25, 2025) தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இது கடந்த 35 ஆண்டுகளில் மாநிலத்தில் முன்கூட்டியே தொடங்கிய பருவமழை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று நாட்களில் மும்பை மற்றும் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை திவிரமாக இருக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

1990-ம் ஆண்டில், தென்மேற்கு பருவமழை மே 20 அன்று மகாராஷ்டிராவில் தொடங்கியது என்று இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி சுஷ்மா நாயர் கூறினார். அரபிக்கடலின் சில பகுதிகள், கர்நாடகா, கோவா, மகாராஷ்டிராவின் சில பகுதிகள், வடக்கு வங்காள விரிகுடா மற்றும் மிசோரமின் சில பகுதிகள், மணிப்பூர் மற்றும் நாகாலாந்தின் சில பகுதிகளில் நேற்று பருவமழை தொடங்கியது என்று வானிலை மையம் அறிவித்தது கவனிக்கத்தக்கது.

கேரளா நிலவரம்: கேரளாவின் கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களின் பல பகுதிகள் மிக கனமழையால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், அம்மாவட்டங்களுக்கு திங்கள் (மே 26) மற்றும் செவ்வாய் (மே 27) ஆகிய தேதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் இன்று (திங்கட்கிழமை) கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர், அதே நேரத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் மற்றும் கேரள பொது சேவை ஆணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் போன்ற முன்னதாக திட்டமிடப்பட்ட தேர்வுகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அதாவது இந்தப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை காரணமாக பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணூர் பல்கலைக்கழகமும் திங்கட்கிழமை திட்டமிடப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைத்துள்ளது.

கேரள அரசு பிறப்பித்த அறிவுறுத்தல்களின்படி, அதிக மழை பெய்யும் மலைப்பகுதிள், நிலச்சரிவு மற்றும் மலை வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளது.

மகாராஷ்டிரா நிலவரம்: தொடர் கனமழை காரணமாக இன்று மும்பை புறநகர் ரயில்கள் சுமார் 8-10 நிமிடங்கள் தாமதமாக வந்தன. மே 25 அன்று புனேவில் உள்ள பாராமதி மற்றும் இந்தாபூர் தாலுகாக்களில் கனமழை பெய்ததால், பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இதனால் மாவட்ட ஆட்சியரின் அவசர வேண்டுகோளின் பேரில் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) சிறப்பு குழுக்களை அனுப்பியது. நேற்று பாராமதி தாலுகாவில் பகலில் 83.6 மிமீ மழை பெய்தது, அதே நேரத்தில் இந்தாப்பூரில் 35.7 மிமீ மழை பெய்ததாக அவர்கள் தெரிவித்தனர். இந்தாப்பூருக்கு அருகிலுள்ள புனே-சோலாப்பூர் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் தண்ணீர் தேங்கியதால் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து மூடப்பட்டது.

இந்தாப்பூரில் 70 கிராமங்களிலும், பாராமதியில் 150 வீடுகளிலும் மழைநீர் புகுந்ததால், உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக அங்கு குடியிருப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையம் மே 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கர்நாடகாவுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையால் மாநிலம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. கனமழை காரணமாக பெங்களூருவின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

கர்நாடக நிலவரம்: மே 25 முதல் 29 வரை பெங்களூருவில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த காலகட்டத்தில் காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவின் மங்களூரு, நுஜிபால்தில் மற்றும் கடபா உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை காரணமாக கணிசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மங்களூரு மற்றும் உல்லாலில், கடுமையான மழையால் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசியதால் மரங்கள் சாய்ந்து, பச்சனாடி மற்றும் மூடுஷெட்டே இடையேயான சாலை போக்குவரத்து தடைபட்டது.

உல்லால் தாலுகாவில், பாவூர் ஹரேகல், உல்லால், அம்பிலிமோகரு மற்றும் முன்னூர் போன்ற ஆற்றங்கரை கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் அதிக மழை பொழிவதால், மக்கள் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஒடிசா நிலவரம்: மே 27 ஆம் தேதி வாக்கில் வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. இதனால் மாநிலத்தில் கனமழை பெய்யும். ஆனால், புயல் குறித்து ஐஎம்டி எந்த முன்னறிவிப்பையும் வெளியிடாததால் பீதி அடையத் தேவையில்லை என்று புவனேஸ்வரில் உள்ள வானிலை மையத்தின் இயக்குநர் மனோரமா மொஹந்தி கூறினார்.

வரும் வாரத்தில் மாநிலத்தில் தீவிர மழைப்பொழிவு இருக்கும். ஆனால் தென்மேற்கு பருவமழை ஒடிசாவிற்கு வரும் தேதி குறித்து ஐஎம்டி எந்த முன்னறிவிப்பையும் வெளியிடவில்லை என்று அவர் கூறினார்.\

கோவை, நீலகிரிக்கு இன்றும் ரெட் அலர்ட்: தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும், நாளையும் தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 28 முதல் 31-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகள், தேனி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Read More

Previous Post

யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்

Next Post

‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் ஆகிறார்? | does suresh raina new batting coach for csk in next ipl season

Next Post
‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் ஆகிறார்? | does suresh raina new batting coach for csk in next ipl season

‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் ஆகிறார்? | does suresh raina new batting coach for csk in next ipl season

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin